ஷார்ட் - கட் எனப்படும் நினைவுச் சூத்திரங்கள் :

SHORT CUT எனப்படும் குறுக்கு வழி என்பது, நாமே நமது கற்பனைத் திறனால் உருவாக்கிக் கொள்ள வேண்டிய ஒன்று.

இதனை ஆங்கிலத்தில் அப்படியே மொழிபெயர்த்து "குறுக்கு வழி" என்று சொல்வதனை விட "நினைவுச் சூத்திரம்" என்ற வார்த்தையினால் வரையறுப்பது மிகவும் பொருந்தும்.
ie, MEMORY FORMULA.

நமக்கு எப்படி அந்த நினைவுச் சூத்திரம், படிப்பதற்கு வசதியாக இருக்கும் என்று நாமே நமது கற்பனை வளத்தைக் கொண்டு அமைத்துக் கொள்ள வேண்டும். இதில் மற்றவரை எதிர்ப்பார்ப்பது எந்த வகையிலும் உதவாது.

காரணம் ஒன்று: நமக்கு எந்த இடத்தில் நினைவுச் சூத்திரம் தேவை என்று நமக்கு தான் தெரியும், மற்றவருக்கு தெரியாது.

இரண்டு: மற்றவர்களுக்கு எந்த நேரத்திலும் நமக்கு குறுக்கு வழியைக் கண்டு பிடித்து கொடுத்துக் கொண்டு இருக்க முடியாது.

எனவே நமக்குத் தேவையான குறுக்கு வழிப் படிப்பினை நினைவுச் சூத்திரங்களை நமது வசதிப்படி நாமே உருவாக்கிக் கொள்வதே மிகவும் சிறந்தது.

நினைவுச் சூத்திரம் என்பது தமிழ், ஆங்கிலம், எண் அல்லது குறியீடு என்று எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

அதன் முக்கியக் காரணம், நமக்கு சம்பந்தப்பட்ட விடையினை நினைவில் வைத்துக் கொள்வதாக அமைய வேண்டும். மேலும் நாம் பயன்படுத்தும் நினைவுச் சூத்திரங்கள் கொஞ்சம் பொருளுடன் அமைவது மேலும் சிறப்பாக அமையும்.

இதனால், நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விடைகளை தேர்வு அறையில் திருப்புதல் செய்து மீட்டிக் கொண்டு வருவதற்கும், தவறில்லாமல்/குழப்பமில்லாமல் விடைகளை தெளிவாக அளிப்பதற்கும் இந்த நினைவுச் சூத்திரங்கள் பயன்படுகின்றன.

அதற்காக, ஒவ்வொரு விடைக்கும் குறுக்கு வழியினைக் கண்டறிந்து நேரத்தைச் செலவிட்டுக் கொண்டு இருப்பது வீணாகவே அமையும்.

நமக்கு எந்த எந்த விடைகளுக்கு நினைவுச் சூத்திரங்கள் தேவை என்பதனை முதலில் கண்டறிய வேண்டும். பெரும்பாலும், மிகக் கடினமான விடைகளை படிப்பதற்கு இந்தக் நினைவுச் சூத்திரங்களைக் கண்டறியலாம்.

௧) உதாரணமாக, பதிற்றுப் பத்து எழுதியவர்களை நினைவில் வைத்துக் கொள்ள நான் கண்டறிந்த நினைவுச் சூத்திரம் இதோ.

(குயில் பாட்டைக் காகம் படிக்க காலைக் கதிரவன் அஸ்தமம் பெற்றது.)

பொருள்: எப்பொழுதும் காலையில் கதிரவன் உதயம் ஆகும்பொழுது, குயில்தான் பாட்டுப்பாடி அதனை வரவேற்கும். அனால் அன்று மட்டும் காகம் பாடியதால் அதனால் வெறுப்பு கொண்ட கதிரவன் உதயமாகாமல் மீண்டும் கடலுக்குள் சென்று காகத்தின் கரகர குரலிலான பாட்டினை நினைத்து பொறுமியது. இதான் கருத்து. )

இதனை மையமாக வைத்து,

முதல் பத்து - யாருமில்லை

இரண்டாம் பத்து - குயில் - குமட்டூர் கண்ணனார்

மூன்றாம் பத்து - பாட்டை - பாலைக் கவுதமனார்

நான்காம் பத்து -- காகம் - காக்கைப் பாடினியார்

ஐந்தாம் பத்து - டிக்க - ரணர்

ஆறாம் பத்து - காலைக் - காப்பியற்றுக் காப்பியனார்

ஏழாம் பத்து - திரவன் - பிலர்

எட்டாம் பத்து - ஸ்தமனம் - ரிசில் கிழார்

ஒன்பதாம் பத்து - பெற்று - பெருங்குன்றூர் கிழார்

பத்தாம் பத்து - பொறுமியது - பொருந்தில் இளங்கீரனார்

மேலும் சில எனது நினைவுச் சூத்திரங்கள் உங்கள் பார்வைக்கு,

௨). கொல்லிமலைத் தலைவன் ஓரி - கொள்ளி வச்சா ஒப்பாரி ( ஓரி )

௩).பிரார்த்தன சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?

ஆத்மாராம் பாண்டுரங் (பிரார்த்தனை பண்ணுன ஆத்மா சாந்தி அடையும்)

௪) . தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித்த தொகுதியை வழங்கும் பொருட்டு "வகுப்புக்கு கோடையை" அறிவித்த பிரிட்டிஷ் பிரதமரின் பெயர் என்ன?

ராம்சே மெக் டொனால்ட் (டொனேஷன் டொனால்ட் ; டொனேஷன் என்றால் கொடை)

இது போன்று நீங்களே உங்களுக்கு தேவையானதை உருவாக்கிக் கொள்ளலாம்.

நமக்கு நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நமக்காக மற்றவர்கள் உருவாக்கித் தர மாட்டார்கள்.

(குறிப்பு: நீங்கள் உங்கள் கற்பனை வளத்தால் கண்டறிந்த இது போன்ற நினைவுச் சூத்திரங்களை விரும்பினால், கருத்துப் பெட்டியில் இடவும்.)

வாழ்த்துக்கள்.

நன்றி.

அன்புள்ள
அஜி, சென்னை.

For more tnpsc information Pl visit www.ajitnpsc.com
Facebook id: https://www.facebook.com/ajitnpsc
இத்தளத்தில் உள்ள மற்ற ஷார்ட்-கட் டிப்ஸ்களை பார்க்க படிக்க...
Akash IAS Academy Study Materials 
Maduramangalam Free Coaching Centre TNPSC Model Test Papers pdf 
List of competitive exams in india
ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்ற சர்வர் ஜெயகணேஷ்!

கருத்துரையிடுக

2 கருத்துகள்