நேரு அறிக்கை (1928)

  • இங்கிலாந்தின் அயலுறவுச் செயலாளர் பிர்கன் ஹெட்பிரபு அனைவரும் ஏற்கும் படியான அரசியல் அமைப்பை உருவாக்க முடியுமா? எனச் சவால் விட்டார்.
  • அச் சவாலை ஏற்ற காங்கிரஸ் 1928 பிப்ரவரி 28 இல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது.

  • அதில் எதிர்கால இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க மோதிலால் நேரு தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவை ஏற்படுத்தியது. 
  • இக்குழுவின் அறிக்கையே நேரு அறிக்கை ஆகும்.

    நேரு அறிக்கையின் சிறப்பம்சம்கள் :

1. நிலையான டொமினியன் அந்தஸ்து வழங்கல். 
2. மத்தியில் முழுப் பொறுப்பு வாய்ந்த அரசு.
3. மாகாணங்களுக்குச் சுயாட்சி
4. மத்திய, மாகாண அரசுகளுக்கிடையே தெளிவான அதிகாரப் பகிர்வு.
5. மத்தியில் இரண்டு அவைகள் கொண்ட சட்டமன்றம்.
நேரு அறிக்கையை முஸ்லீம் லீக் தலைவரான முகமது அலி ஜின்னா ஏற்கவில்லை. இது முஸ்லீம்களின் நலனுக்கு எதிரானது என்ற கருதினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்