வன ஆராய்ச்சி மையத்தில் கிளார்க் சுருக்கெழுத்தர் பணி

தெலங்கானா, ஹைதராபாத்திலுள்ள Institute of Forest Biodiversity ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர், கிளார்க் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணியிடங்கள் விவரம்:

1. Stenographer Grade-ll:

1 இடம் (பொது).
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 27க்குள். 

2. Lower Division Clerk: 

1 இடம் (ஓபிசி) தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் டைப்பிங்கில் நிமிடத்திற்கு 30 ஆங்கில வார்த்தைகள் என்ற விகிதத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

3. Multi Tasking Staff (MTS): 

5 இடங்கள்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு; 24.11.2020 தேதியின்படி கணக்கிடப்படும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. 

தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:
₹300/- இதை ஏதாவது ஒரு தேசிய வங்கியில் 'The Director, Institute of Forest Biodiversity, Hyderabad' என்ற பெயருக்கு DD எடுக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:
www.icfre.gov.in என்ற இணையதளம் மூலம் மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Director, Institute of Forest Biodiversity, Dulapally, Hyderabad-500100. விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 24.11.2010.

கருத்துரையிடுக

0 கருத்துகள்