தேசிய கீதம்

  • நமது தேசிய கீதத்தை இயற்றியவர் தேசியக்கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்
    ஆவார்.

  • வங்காள மொழியில் இயற்றப்பட்ட இப்பாடல் 5 பத்திகளைக் கொண்டது.
    அவற்றில் முதல் பத்தியில் உள்ள பாடல் மட்டுமே தேசியகீதமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
  • 1950-ஆம் ஆண்டு சனவரி 24-ஆம் நாள் நமது அரசியல் நிர்ணய
    சபையால் நமது தேசிய கீதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 
  • 1911-ஆம் ஆண்டு டிசம்பர் 27 - ஆம் நாள், கல்கத்தாவில் நடந்த இந்திய
    தேசிய காங்கிரஸ் மாநாட்டில் தேசிய கீதம் முதன் முறையாகப் பாடப்பட்டது.

  • தேசிய கீதத்தைப் பாடும் கால நேரம் 52 விநாடிகள் ஆகும். 
  • குறுகிய வடிவ (short version) தேசிய கீதத்தைப் பாடும் கால நேரம் 20
    விநாடிகள் ஆகும். 
  • தேசிய கீதம், தாய்நாட்டின் பெருமை, புகழ் ஆகியவற்றை பிரதிபலிப்பதாக உள்ளது. அது தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு, சகிப்புத்தன்மை, நாட்டுப்பற்று ஆகிய அறச்செய்திகளை உணர்த்துகிறது.

  • தேசிய கீதத்தின் பொருள் :

    இந்தியத் தாயே! மக்களின் இன்ப, துன்பங்களைக் கணிக்கின்ற நீயே
            எல்லாருடைய மனதிலும் ஆட்சி செலுத்துகின்றாய்.

    நின்திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும் கூர்ச்சரத்தையும், மராட்டியத்தையும்,

    திராவிடத்தையும், ஒரிசாவையும், வங்காளத்தையும் உள்ளக்கிளர்ச்சி
    அடையச் செய்கிறது.

    நின் திருப்பெயர் இந்திய இமயமலைத் தொடரில் எதிரொலிக்கிறது.
    யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றிணைகிறது.

    இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது.

    அவை நின் அருளை வேண்டுகின்றன. நின் புகழைப் பரப்புகின்றன.

    இந்தியாவின் இன்ப, துன்பங்களைக் கணிக்கின்ற தாயே உனக்கு வெற்றி!                         வெற்றி! வெற்றி!

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்