உள்ளாட்சி அமைப்புகள் | பல்வந்த்ராய் கமிட்டி, அசோக் மேத்தா கமிட்டி

உள்ளாட்சி அமைப்புகள் உருவாகக் காரணமான கமிட்டிகள் இரண்டு.
1) பல்வந்த்ராய் கமிட்டி, 2) அசோக் மேத்தா கமிட்டி

பல்வந்த்ராய் கமிட்டி:

மக்களின் பிரச்னைகளை அரசிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். மக்களின் தேவைகளுக்கேற்ப வளர்ச்சித் திட்டங்கள் வேண்டும். திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் ஆகிய அம்சங்களை நிறைவேற்றும் பொருட்டு, 1957இல் பல்வந்த்ராய் மேத்தா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.

ஆய்வுக்குப் பின்னர், பல்வந்த்ராய் குழு மேற்கண்ட பிரச்னைகளைத் தீர்க்க அதிகார பரவலாக்கம் வேண்டும். மக்களின் உள்ளூர் பிரச்னைகளை உள்ளூரிலே முடித்துக்கொள்ள அது வழிவகைசெய்யும் என்று அந்தக் குழு நம்பியது. அதிகார பரவலாக்கத்திற்கு, பஞ்சாயத்து அரசை அது பரிந்துரை செய்தது.

இந்தக் கமிட்டியின் பரிந்துரைப்படி, 1960களின் மத்தியில் நாடு முழுவதும் பஞ்சாயத்து அரசு உருவாக்கப்பட்டது. மக்களின் அன்றாடப் பிரச்னைகளை இந்தப் பஞ்சாயத்து தீர்த்து வந்தது. ஆனால், சில ஆண்டுகளிலேயே நாட்டில் ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாடுகளாலும், சீனாவுடனான போராலும் இந்தப் பஞ்சாயத்துகளால் திறம்படச் செயற்படமுடியவில்லை. மேலும் பஞ்சாயத்துகள் ஜனநாயகத்தை மேம்படுத்தும் கருவிகளாக இன்றி, தேசியத் திட்டங்களைச் செயற்படுத்தும் அரசாங்க முகவர்களாக மாறிப்போய் இருந்தன.

நாட்டின் நிலைமை சீரான பின்பு, 1977இல் மத்திய அரசு, பஞ்சாயத்து அரசை மேம்படுத்த முற்பட்டது. அசோக் மேத்தா தலைமையில் இன்னொரு ஆய்வுக்குழு (கமிட்டி) ஏற்படுத்தப்பட்டது.


அசோக் மேத்தா கமிட்டி:

மாவட்ட அளவில் ஜில்லா பரிஷத்தும், அதன் கீழ் மண்டல பஞ்சாயத்தும் அமைக்கப்பட வேண்டும் என்று அது பரிந்துரை செய்தது. பஞ்சாயத்துகளுக்கு வரி வசூலிக்கும் உரிமை வழங்க வேண்டும் என்றும், பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு பரிந்துரை செய்தது.

ஆனால், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், இந்தக் குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்த முடியாமல் போய்விட்டது.
அதன் பின், ஜி.வி.கே.ராவ் தலைமையின்கீழ் ஒரு குழுவும், எல்.எம். சிங்க்வி தலைமையின் கீழ் இன்னொரு குழுவும் பி.கே.துங்கன் தலைமையின்கீழ் மற்றொரு குழுவும் வெவ்வேறு ஆண்டுகளில் நியமிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அவற்றின் பரிந்துரைப்படி, 64வது சட்டத் சீர்திருத்த மசோதா வரையறுக்கப்பட்டது. ஆனால், மாநிலங்க வையில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் மசோதா அமலாக்கப்படவில்லை.

பின்னர், 1992இல் இந்தக் கமிட்டிகளின் பரிந்துரைகள் 73வது (Rural local government) மற்றும் 74வது (Urban local government) சட்டத் சீர்திருத்தங்களாக அமலாக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் | Indian Constitution in tamil
இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவது எப்படி?

இந்திய அரசியலமைப்பு -
Indian Constitution

இந்திய அரசியலமைப்பு பகுதி | மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம்
பொது கணக்குக் குழு (Public Accounts Committee) என்றால் என்ன?
குடியரசுத் தலைவர் பற்றி சில தகவல்கள்
இந்திய அரசியலமைப்பு  | அரசியல் சட்டத்தை திருத்தம் செய்யும் முறை
இந்திய அரசியலமைப்பு | அடிப்படைக் கடமைகள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்