சுற்றுச்சூழல் மாசுபாடு ‍| காற்று மாசுபாடு



சுற்றுச்சூழல் மாசுபாடு 

சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும்.

சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற்சமநிலை பாதிக்கப்படும்.

காற்று மாசுபாடு

காடுகளை அழிப்பது மற்றும் புகையினால் காற்றில் கலக்கும் நச்சு வாயுக்கள் என இரண்டு வகையில் காற்று மாசுபடுகிறது. 

இருபதாம் நூற்றண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 50 சதவிகித மழைக்காடுகள் அழிந்து விட்டன. மழைக்காடுகளில்தான் உலகின் 70 விழுக்காடு தாவர மற்றும் விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றன. 

ஒரு மரத்தின் சராசரி வயது 50 ஆண்டுகள் எனில் அது ஏறக்குறைய 2700 கிலோ பிராண வாயுவை உற்பத்தி செய்து நம்மை வாழ வைக்கிறது. மேலும், மரங்களிலிருந்து காகிதம், வீட்டிற்குத் தேவையான மரப் பொருட்கள், மருந்துகள் போன்ற சுமார் 5000 எண்ணிக்கையிலான உப பொருட்கள் கிடைக்கின்றன.

ஆனால் தற்போது ஒவ்வொரு நிமிடமும் ஒரு கால்பந்து அளவுள்ள காடுகள் அழிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலை நீடித்தால் மனிதகுலம் பெரும் இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே வனங்களை பாதுகாப்பதும், மரங்களை வளர்ப்பதும் ஒவ்வொரு குடிமகனும் தன் கடமையாக கருத வேண்டும்.

காற்று மாசுபடுவதற்கு மற்றொரு காரணம் எரிபொருளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது. இதனால் நச்சு வாயுக்கள் வெளியாகி, புவி வெப்பமாகிறது. காற்றுமாசினால் நகரங்களில் வாழும் மக்களிடையே பல்வேறு நோய்கள் ஏற்படும் என கண்டறிந்துள்ளனர்.


கட்டுப்படுத்தும் முறை

எரிபொருளை சிக்கனமாக, தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவது, காலார நடந்து செல்வது, மிதிவண்டியை பயன்படுத்துவது, மகிழுந்து, வாண வேடிக்கைகளை தவிர்ப்பது, குப்பைகள் எரிப்பதை தவிர்ப்பது போன்ற செயல்களில் நாம் ஈடுபட வேண்டும்.
ஆலையை சுற்றிலும் பயன்தரும் மரங்களை வளர்ப்பதன் மூலம் காற்று மாசேற்றத்தை கட்டுப்படுத்த முடியும்.


#காற்று_மாசுபடுவதை_தவிர்ப்பது_எப்படி?

#காற்று_மாசுபடுவதை_கட்டுப்படுத்துது_எப்படி?

கருத்துரையிடுக

0 கருத்துகள்