பல்கலைக்கழகத்தில் பணி

தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) மூலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் அல்லாத அலுவலக ஆய்வக பணியாளர்களை (நான் டீச்சிங் ஸ்டாப்) தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

மருத்துவ அலுவலர், உதவிப் பதிவாளர், தொழில்நுட்ப உதவியாளர், பிசியோதெரபிஸ்ட், மருந்தாளுனர், தொழில்நுட்ப உதவியாளர், ஆய்வுக்கூட உதவியாளர், பொறியியல் உதவியாளர் உள்பட பல்வேறு பணி பிரிவுகளில் 1145 காலிபணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணி இடங்களை பொறுத்து 27 வயது, 30 வயது, 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதுபோல் பதவிகளை பொறுத்து பட்டப்படிப்பு, முதுகலை படிப்பு, என்ஜினீயரிங், எம்.பி.பி.எஸ், 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ. என கல்வி தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கணினி அடிப்படையிலான தேர்வு, ஆளுமை திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-3-2021. 

விண்ணப்பிப்பது பற்றிய மேலும் விரிவான விவரங்களை https://nta.nic.in/Webinfo/examinations என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்