TNPSC Group 4 Science Study Materials pfd download | கல்லீரல்


கல்லீரல் :

உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமானச் சுரப்பி கல்லீரல் ஆகும். இது செம்மண் நிறத்தில் காணப்படுகிறது. இது வலது மற்றும் இடது என இரண்டு கதுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வலது கதுப்பானது, இடது கதுப்பைவிட பெரிதானதாகும். 

கல்லீரலின் கீழ்பகுதியில் பித்தப்பையானது அமைந்துள்ளது. கல்லீரல் செல்கள் பித்தநீரைச் சுரக்கின்றன. அது தற்காலிகமாக பித்தப்பையில் சேகரிக்கப்படுகிறது. பித்தநீரானது உணவு உட்புகும் நேரத்தில் சிறுகுடலுக்குள் வெளியிடப்படுகிறது.

பித்தநீரில் பித்தஉப்புகளும் (சோடியம் கிளைக்கோலேட் மற்றும் சோடியம் டாரோகிளைக்கோலேட்) பித்த நிறமிகளும் (பைலிரூபின் மற்றும் பைலிவிரிடின்) காணப்படுகின்றன. 

பித்தஉப்புகள், பால்மமாக்கல் (பெரிய கொழுப்பு திவலைகள் சிறுசிறு திவலைகளாக மாற்றப்பட்டு கொழுப்பு செரிக்கவைக்கப்படுகிறது) என்ற செயலின் அடிப்படையில் கொழுப்பு செரித்தலுக்கு உதவுகின்றன.


கல்லீரலின் பணிகள்

• இரத்த சர்க்கரை மற்றும் அமினோ அமில அளவைக் கட்டுப்படுத்துதல்.
• கருவில் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குதல்.
• இரத்தம் உறைதலுக்குப் பயன்படும் பைபிரினோஜன் மற்றும் புரோத்ராம்பின் ஆகியவற்றை உருவாக்குதல்.

• சிவப்பு இரத்த அணுக்களை அழித்தல்.

• இரும்பு, தாமிரம், வைட்டமின்கள் A மற்றும் D ஆகியவற்றை சேமித்து வைத்தல்.
• ஹெப்பாரின் உருவாக்குதல் (இரத்தம் உறைதலை தடுப்பான்).
• நச்சுகள் மற்றும் உலோக நஞ்சினை வெளியேற்றல்.
• மருந்துப் பொருட்கள் மற்றும் ஆல்கஹாலின் நச்சுத் தன்மைகளை நீக்குதல்.

#New 9th Science Text Book Notes  

19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
சுவாமி
விவேகானந்தர் 

அலிகார்‌ இயக்கம்‌ | சர்‌ சையது அகமதுகான்‌

இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்

இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்

TNPSC General Tamil Mock Test Free Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்