9th Tamil Ellakkanakurippu

இலக்கணக்குறிப்பு :

இயல்  - 1 

1.  எத்தனை எத்தனை ,  விட்டு விட்டு -  அடுக்குத் தொடர்கள்

2. ஏந்தி  -  வினையெச்சம்

3. காலமும் -  முற்றும்மை

4. முத்திக்கனி -  உருவகம்

5. தெள்ளமுது -  பண்புத்தொகை

6. குற்றமிலா  - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

7. நா -  ஓரெழுத்து ஒருமொழி

8. செவிகள் உணவான -  நான்காம் வேற்றுமைத்தொகை

9. சிந்தாமணி -  ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்


இயல்  - 2 

10. வெந்து,  வெம்பி,  எய்தி -  வினையெச்சங்கள்

11.  மூடுபனி -  வினைத்தொகை

12.  ஆடுங்கிளை -  பெயரெச்சத் தொடர்

13.  கருங்குவளை,  செந்நெல் -  பண்புத்தொகைகள்

14.  விரிமலர் -  வினைத்தொகை

15.  தடவரை -  உரிச்சொல் தொடர்

16.  மூதூர் ,  நல்லிசை , புன்புலம் -   பண்புத்தொகைகள்

17.  நிறுத்தல் -  தொழிற்பெயர்

18.  அமையா  -  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

19.   நீரும் நிலமும்,  உடம்பும் உயிரும் -  எண்ணும்மைகள்

20.  அடுபோர் -  வினைத்தொகை

21.  கொடுத்தார் -  வினையாலணையும் பெயர்

10ஆம் வகுப்பு புதிய தமிழ்ப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றள்ள பகுபத உறுப்பிலக்கணம்


இயல் - 3

22.  தோரண வீதியும், தோமறுகொட்டியும் -  எண்ணும்மைகள்

23.  காய்க்குலைக்கமுகு, பூக்கொடிவல்லி, முத்துத்தாமம் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்  உடன்தொக்கதொகைகள்

24.  மாற்றுமின் ,  பரப்பும்மின்  -  ஏவல் வினைமுற்றுகள்

25.   உறுபொருள் -   உரிச்சொல்தொடர்

26.  தாழ் பூந்துறை -  வினைத்தொகை

27.  பாங்கறிந்து -  இரண்டாம் வேற்றுமைத் தொகை

28. நன்பொருள்,   தண்மணல்,  நல்லுரை - பண்புத்தொகைகள்

இயல்- 4

29.  பண்பும் அன்பும் ,  இனமும் மொழியும் -   எண்ணும்மைகள்

30. சொன்னோர் -  வினையாலணையும் பெயர்

31. உணர்ந்தோர் -  வினையாலணையும் பெயர்


இயல்  - 5

32.  மாக்கடல்  -  உரிச்சொல் தொடர்

33.  ஆக்கல்  -   தொழில் பெயர்

34.  பொன்னேபோல்  -  உவம உருபு

35.  மலர்க்கை -  உவமைத்தொகை

36.  வில்வாள்  -   உம்மைத்தொகை

37.  தவிர்க்க ஒணா  -   ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

38.  அறிவார், வல்லார்  -   வினையாலணையும் பெயர்கள்

39.  விதையாமை ,  உரையாமை  -  எதிர்மறை தொழிற்பெயர்

40.  தாவா -  ஈறுகெட்டஎதிர்மறைப் பெயரெச்சங்கள்


இயல்- 6

41.  பைங்கிளி -   பண்புத்தொகை

42.  பூவையும் குயில்களும், முதிரையும் , சாமையும் , வரகும் -  எண்ணும்மைகள்

43.  இன்னிளங் குருளை  -   பண்புத்தொகை

44.   அதிர் குரல் -   வினைத்தொகை

45.  மன்னிய  -   பெயரெச்சம்

46.  வெரீஇ -   சொல்லிசை அளபெடை

47.  கடிகமழ்  -    உரிச்சொற்றொடர்

48.  மலர்க்கண்ணி -  மூன்றாம் வேற்றுமைஉருபும் பயனும்  உடன்தொக்கதொகை

49.  எருத்துக்கோடு  -   ஆறாம் வேற்றுமைத்தொகை

50.  கரைபொரு  -   இரண்டாம் வேற்றுமைத்தொகை

51.  மறைமுகம் -  உவமைத்தொகை

52.  கருமுகில்-   பண்புத்தொகை

53.  வருமலை -  வினைத்தொகை

54.  முத்துடைத் தாமம் -   இரண்டாம் வேற்றுமை தொகை

இயல்- 7

55.   நற்றவம்  -   பண்புத்தொகைகள்

56.   செய்கோலம்  -  வினைத்தொகை

57.  தேமாங்கனி  (தேன் போன்ற மாங்கனி)  -  உவமைத்தொகை

58.  இறைஞ்சி  -  வினையெச்சம்

59.  கொடியனார்  -   இடைக்குறை


இயல் -8

60. பிறவி இருள், ஒளியமுது,  வாழ்க்கைப்போர் -  உருவகங்கள்

61.  பாண்டம் பண்டமாக -  அடுக்குத்தொடர்

62. வாயிலும் சன்னலும் -  எண்ணும்மை

63. ஆக்குக,  போக்குக,  நோக்குக -  வியங்கோள் வினைமுற்றுக்கள்


இயல் - 9

64. உருண்டது , போனது - ஒன்றன் பால் வினைமுற்றுகள்

65. சரிந்து - வினையெச்சம்

66. அனைவரும் - முற்றும்மை

67. களைஇய -  சொல்லிசை அளபெடை

68. பெருங்கை, மென்சினை - பண்புத்தொகைகள்

69. பொளிக்கும் - செய்யும் என்னும் வினைமுற்று

70. பிடிபசி - ஆறாம் வேற்றுமைத் தொகை

71. அன்பின - பலவின்பால் அஃறிணை வினைமுற்று

Click & Download Pdf

 10th இலக்கணக்குறிப்பு Pdf Download 

கருத்துரையிடுக

0 கருத்துகள்