உற்பத்தி | 7ம் வகுப்பு சமூக அறிவியல்
உற்பத்தி (Production) - என்றால் என்ன?
உற்பத்தி – பொருள் விளக்கம்
நுகர்வோரின் பயன்பாட்டுக்காக, மூலப் பொருளையும், மூலப்பொருள் அல்லாதனவற்றையும் ஒன்றிணைத்து, ஒரு பொருளை உருவாக்கும் செயலே உற்பத்தியாகும். இஃது, ஒவ்வொருவரின் தேவைக்கேற்பச் சிறந்த சேவையையும் மதிப்பையும் அளிப்பதில் இன்றியமையாத இடத்தைப்பெறுகிறது.
பயன்பாட்டின் வகைகள்
1) வடிவப் பயன்பாடு
ஒரு விளை பொருளின் வடிவம் மாற்றப்படும்போது, அதன் பயன்பாடுமிகுதியாகிறது.
எடுத்துக்காட்டாக, விளை பொருளாகிய பருத்தியைக் கொண்டு ஆடைகள் உருவாக்கப்படும்போது, அதன் தேவையும் பயன்பாடும் உயர்கின்றன.
2) இடப்பயன்பாடு
ஒரு விளை பொருள், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லப்படும்போது, அதன் பயன்பாடு மிகுதியாகிறது.
எடுத்துக்காட்டாக, விளைபொருளான அரிசி தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் கொண்டு செல்லப்படும்போது, அதன் தேவையும் பயன்பாடும் அதிகரிக்கின்றன.
காலப் பயன்பாடு
ஒரு விளைபொருளை எதிர்காலத் தேவைக்காகச் சேமித்து வைக்கும்போது, அதன் பயன்பாடுமிகுகிறது.
எடுத்துக்காட்டாக, நுகர்வோர்களால் ஆண்டு முழுவதும் பயன்படுத்தக் கூடிய உணவுப் பயிர்களான நெல், கோதுமை பொன்றவற்றைச் சேமித்து வைப்பதால், அவற்றின் தேவையும் பயன்பாடும் மிகுதியாகின்றன.
0 கருத்துகள்