இடுகைகள்

Featured post

சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள்

படம்
சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள் (அணங்குகள்) 1. வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி பிடர்த்தலை பீடத்தில் ஏறிய - கொற்றவை 2. கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி 3. இறைவனை நடனமாடச் செய்தவள் - பத்ரகாளி 4. அச்சம் தரும் காட்டை விரும்பும் வீடாகக் கொண்டவள் - காளி 5. தாருகன் என்ற அசுரனின் மார்பை மிளந்தவள் - துர்க்கை 10th Tamil Text Book - Silapathikaram

TNPSC - ORIGINAL TAMIL QUESTION PAPER COLLECTION

படம்
2010 To 2023 - TNPSC - ORIGINAL TAMIL QUESTION PAPER COLLECTION 42 Tamil Question Papers - 369 Pages Click & Download Full Pdf

TNPSC திருக்குறள் - ஒப்புரவறிதல்

படம்
திருக்குறள் - TNPSC Group IV General Tamil ஒப்புரவறிதல் 1. கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு. விளக்கம்: மழை பொழியும் மேகத்திற்கு நாம் கைம்மாறு செய்வது இல்லை. அதுபோல, பிறர்க்கு உதவி செய்து விட்டு அவர்களிடம் கைம்மாறு எதிர்பார்க்ககூடாது. 2.  தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. விளக்கம்: ஒருவன் தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து சேர்த்த செல்வத்தை தான் மட்டும் அனுபவிக்காமல் பிறர்க்கு கொடுத்து உதவ வேண்டும்.

திருக்குறள் TNPSC - வலியறிதல்

படம்
திருக்குறள்- வலியறிதல் 1.  வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந் துணைவலியுந் தூக்கிச் செயல். விளக்கம்: ஒரு செயலை செய்யும் முன் தன் வலிமையும் பகைவர் வலிமையும் துணை நிற்பவர் வலிமையும் ஆராய்ந்து செய்ய வேண்டும். 2.  ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்  செல்வார்க்குச் செல்லாத தில். விளக்கம்: ஒரு செயலை மேற்கொள்ளும் போது.அதை பற்றி நன்கு அறிந்து தெரிந்து செயல்படுவதால் அச்செயல் நன்றாக முடியும் என்பதே.

திருக்குறள் - காலமறிதல்

படம்
காலமறிதல் (செயலை நிறைவேற்றுவதற்கு ஏற்ற காலத்தை அறிதல்) 1. பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. விளக்கம்: காகம் தன்னை விட வலிமையான கோட்டானை பகலில் வெல்லும். அதுபோல பகைவரை வெல்ல அரசன் காலம் அறிந்து செயல்பட வேண்டும். 2. பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத் தீராமை யார்க்குங் கயிறு. விளக்கம்: ஒரு செயலை காலம் அறிந்து செய்வதால் செல்வத்தை தம்மை விட்டு நீங்காமல் கட்டி வைக்கும் கயிறாக காலம் உதவுகிறது.

திருக்குறள் - வாய்மை

படம்
வாய்மை 1.  வாய்மை எனப்படுவ(து) யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். விளக்கம்: வாய்மை என்பது மற்றவர்களுக்கு தீமை பயக்கும் சொற்களை பேசாமல் நன்மை செய்வதே ஆகும். 2.பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த  நன்மை பயக்கு மெனின். விளக்கம்: ஒருவனுக்கு பொய்யான ஒன்றை கூறி அவனுக்கு நன்மை பயக்கும் என்றால் அதுவே வாய்மை எனப்படும்.

திருக்குறள் - நட்பு

படம்
திருக்குறள் தொடர்பான செய்திகள்   1.செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. விளக்கம்: நட்பை கொண்டு செய்கின்ற செயலுக்குச்  சிறந்த பாதுகாப்பு உண்டு. 2.நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்நீர பேதையார் நட்பு. விளக்கம்: அறிவுடையவர்களின் நட்பு வளர்பிறை போல வளர்ந்து கொண்டு போகும். அறிவு இல்லாதவர்கள் நட்பு தேய்பிறை போல தேய்ந்துக் கொண்டு போகும்.