- பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை.
- பத்துப்பாட்டில் காலத்தால் பிந்திய நூல்
- கடவுள் வாழ்த்தாகக் கருதி முதலில் வைக்கப்பட்டது
- ஆசிரியர் நக்கீரர்
- நெடுநல்வாடையைப் பாடியவரும் நக்கீரர்
- 317 அடிகளைக் கொண்டது
- பாடப்பட்டவன் முருகன்
- ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெறும். திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போனால் (முருகன்) பெயர் பெற்றது.
- ஆசிரியப்பாவால் ஆனது
- இதன் சிறப்புக் கருதி இந்நூலினை சைவத் திருமுறைகளுள் 11ஆம் திருமுறையில் இணைத்து வைத்துள்ளனர்
- இருதொகுப்பில் (பத்துப்பாட்டு, திருமுறைகள்) இடம் பெற்ற ஒரே நூல் திருமுருகாற்றுப்படை
- இந்நூலை முதன்முதலில் 1834-இல் சரவணப்பெருமாளையர் பக்திப் பாசுரமாகப் பதிப்பித்தார்.
திருமுருகாற்றுப்படை கூறும் முருகனின் அறுபடை வீடுகள்
1. திருப்பரங்குன்றம்
2. திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
3. திரு ஆவினன் குடி (பழனிமலை, சித்தன்வாழ்வு)
4. திருவேரகம் (சுவாமி மலை)
5. குன்றுதோறாடல்
6. பழமுதிர் சோலை
திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது.
0 கருத்துகள்