துறைத் தேர்வுகள் - டிசம்பர் 2019

 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்
விளம்பர எண் 558           நாள் 01.10.2019 

துறைத் தேர்வுகள் - டிசம்பர் 2019

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நிரந்தரப் பதிவு துறைத்தேர்வுகள் டிசம்பர்-2019 முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

டிசம்பர்-2019 ஆம் ஆண்டிற்கான துறைத் தேர்வுகள் 22.12.2019 முதல் 30.12.2019 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உட்பட (25.12.2019 - கிறிஸ்துமஸ் விடுமுறை நீங்கலாக) தேர்வாணையத்தால் நடத்தப்பெற உள்ளன. 

விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களை 01.10.2019 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 30.10.2019. அன்று 11.59 பிற்பகல் வரை. 

துறைத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் / துறைத்தேர்வுகள் எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான திருத்தப்பட்ட குறிப்பு மற்றும் விதிமுறைகள் / பாடத்திட்டம் / தேர்வு அமைப்பு முறை / தேர்வின் பெயர் / தேர்வு குறியீடு / தேர்வுகளுக்கான கட்டணம் / கால அட்டவணை போன்றவை தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in-ல் காணலாம்.

மாற்று நுழைவுச் சீட்டு குறித்த கோரிக்கைகள் கண்டிப்பாக பரிசீலிக்கப்படமாட்டாது.

- தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்