முகப்பு HISTORY குப்தப் பேரரசு | முக்கியமான குறிப்புகள்
குப்தப் பேரரசு | முக்கியமான குறிப்புகள்
மௌரிய பேரரசிற்குப் பின்னர், குப்தப் பேரரசு பெரும் ஆற்றல்மிக்கதாக உருவானது.
ஸ்ரீகுப்தர், குப்தப் பேரரசைத் தோற்றுவித்தார். சமுத்திர குப்தர் (335 – 375) பல பகுதிகளை கைப்பற்றி, பேரரசை ஒருங்கிணைத்தார். இரண்டாம் சந்திரகுப்தர் தனது படையெடுப்புகளின் மூலமும் திருமண உறவுகள் மூலமும் பேரரசை மேலும் விரிவாக்கினார்.
குமாரகுப்தர் நாளந்தா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தார். ஸ்கந்த குப்தர் ஹூனர்களை விரட்டியடித்தார். ஆனால் இப்போரின் காரணத்தால் அவரது அரசுக்கு கடும் நிதிநெருக்கடி ஏற்பட்டது. குப்த அரசர்கள் தாம் தெய்வாம்சம் படைத்தவர்கள் என்று கூறிக் கொண்டனர். அவர்களுக்கு அமைச்சர்கள் குழுவும், அதிகாரிகள் குழுவும் உதவி செய்தன. குப்த அரசர்கள் கலை, இலக்கியம், அறிவியல், ஆகியவற்றை ஆதரித்தனர்.
அவர்களது அவையை காளிதாசர், அரிசேனர், அமரசிம்மர், தன்வந்திரி, வராகிமிரர் போன்றோர் அலங்கரித்தனர். ஹூணர்களின் படையெடுப்பால் கருவூலம் காலியானது, பிற்பால குப்த அரசர்கள் வலிமை குன்றியது ஆகியன குப்த பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணங்களாயின.
1 கருத்துகள்
TNPSC Group IV தேர்வில் நான் எப்படி வெற்றி பெற்றேன் ?
பதிலளிநீக்கு2018 வெற்றியாளரின் அனுபவங்களும் போராட்டங்களும்...
http://www.tettnpsc.com/2018/08/ccse-4-group-iv-exam-tips.html