அகப்பொருள் இலக்கணம்

  •  பொருள் என்பது ஒழுக்கமுறை. 
  • நம் தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்வியலை அகம், புறம் என வகுத்தார்கள். இதனைப் பொருள் இலக்கணம் விளக்குகிறது.
  • அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவுநிலைகளைக் கூறுவது அகத்திணை
  • குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை ஆகிய ஏழும் அகத்திணைகள் ஆகும். இவற்றில் முதல் ஐந்தும் அன்பின் ஐந்திணைகள்.
  • முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியன ஐந்திணைகளுக்கு உரியன.
  • நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும்
  • நிலம் ஐந்து வகைப்பகைப்படும்.
  • பொழுது, பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்.
  • ஓராண்டின் ஆறு கூறுகளைகளைப் பெரும்பொழுது என்று நம் முன்னோர் பிரித்துள்ளனர்.
  • 1. கார்காலம் – ஆவணி, புரட்டாசி
    2. குளிர்காலம் – ஐப்பசி, கார்த்திகை
    3. முன்பனிக் காலம் – மார்கழி, தை
    4. பின்பனிக் காலம் – மாசி, பங்குனி
    5. இளவேனிற் காலம் – சித்திரை, வைகாசி
    6. முதுவேனிற் காலம் – ஆனி, ஆடி

    • ஒரு நாளின் ஆறு கூறுகளைச் சிறுபொழுது என்று பிரித்துள்ளனர்.
    சிறுபொழுது (ஒரு நாளின் ஆறு கூறுகள்)
    1. காலை – காலை 6 மணி முதல் 10 மணி வரை
    2. நண்பகல் – காலை 10 மணி முதல் 2 மணி வரை
    3. எற்பாடு – பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
    4. மாலை – மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
    5. யாமம் – இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
    6. வைகறை – இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

    • எற்பாடு என்றால்…  எல்+பாடு = எற்பாடு.
    • ‘எல்’ என்றால் ஞாயிறு, ‘பாடு’ என்றால் மறையும் நேரம். சூரியன் மறையும் நேரம் என்பது பொருள்
    • ஒவ்வொரு நிலத்திற்கும், பெரும்பொழுதும் சிறுபொழுதும் ஒன்றுபோல வாரா.

    கருப்பொருள் என்றால் என்ன?

    ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள், தொழில், விலங்கு இவையெல்லாம் கருப் பொருள்கள். 

    ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனியே தெய்வம் முதலாகத் தொழில் வரையில் தனித்தனியே இருக்கும். கவிதையில் உரிப்பொருளை இக்கருப்பொருள் பின்னணியில் அமைத்துப் பாடுவது நம் மரபு.


    கருத்துரையிடுக

    0 கருத்துகள்