தமிழ் எழுத்துகளின் வகை தொகை
New 6th Tamil Book | Tamil ilakkanam | TNPSC Group IV, Group II, Group IIA, Group VII, VAO Exam, TET Exam | General Tamil Study Material
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் ஐந்து.
1) எழுத்து இலக்கணம்
2) சொல் இலக்கணம்
3) பொருள் இலக்கணம்
4) யாப்பு இலக்கணம்
5) அணி இலக்கணம்
- ஒலி வடிவாக எழுப்பப்படுவதும் வரிவடிவாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.
- இயல்பாகக் காற்று வெளிப்படும்போது உயிர் எழுத்துகள் பிறக்கின்றன. வாயைத் திறத்தல், உதடுகள் விரித்தல், உதடுகள் குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் ‘அ’ முதல் ‘ஒள’ வரையுள்ள பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பிறக்கின்றன.
- மாத்திரை என்பது இங்குக் கால அளவைக் குறிக்கிறது. ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் கால அளவாகும்.
- குறுகி ஒலிக்கும் அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறில் எழுத்துகள்.
- நீண்டு ஒலிக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழும் நெடில் எழுத்துகள்.
- குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு - 1 மாத்திரை
- நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு - 2 மாத்திரை
- மெய் என்பது உடம்பு எனப் பொருள்படும். மெய் எழுத்துகளை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் மெய்யெழுத்துகள் ஆகும்.
- க், ச், ட், த், ப், ற் - வல்லினம்
- ங், ஞ், ண், ந், ம், ன் - மெல்லினம்
- ய், ர், ல், வ், ழ், ள் - இடையினம்
- மெய் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு - அரை மாத்திரை
- மெய் எழுத்துகள் பதினெட்டும் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றுபவை உயிர்மெய் எழுத்துகள்.
- உயிர்மெய் எழுத்துகளையும் உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் என இருவகைப்படுத்தலாம்.
- ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு அரை மாத்திரை
கலைச்சொற்கள்:
வலஞ்சுழி - Clock wise
இடஞ்சுழி - Anti Clock wise
இணையம் - Internet
குரல்தேடல் - Voice Search
தேடுபொறி - Search engine
தொடுதிரை - Touch Screen
0 கருத்துகள்