தடைகளை தகர்த்தெறியுங்கள்.... - Jaya Jas

HELLO FRIENDS......
நிறைய பேருக்கு படிக்க தடையாக இருப்பது, நேரம் இல்லை, படிக்க தொடங்கினால் தூக்கம் வருகிறது, பணம் இல்லை, சோம்பேறித்தனம், சில பேருக்கு மன அழுத்தம், TENSION, படிப்பது மறந்து போகிறது. சில பேருக்கு social network use பண்றதால, இப்படி காரணம் அடுக்கிக் கொண்டே போகலாம்.



FRIENDS ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். தடையாக நினைக்கும் வரை தடையாகவே அமையும். தடைகளை தகர்த்தெறியுங்கள்....
எனக்கு தெரிந்த சிலவற்றை மட்டும் சொல்லி கொள்கிறேன் friends. முதலில் நேரம் பற்றி......


நேரம் இன்மை

  • Friends ஒரு நாளில் 24 மணி நேரம்.....உங்களுக்கு படிக்க ஒரு இரண்டு மணி நேரம் கூடவா கிடைக்கவில்லை???
  • ஒரு நாளில் எழுவது முதல் இரவு படுக்கும் வரை செய்யும் செயல்களை அட்டவணை இடுங்கள். அப்ப உங்களுக்கே தெரியும். வீணாக நேரத்தை எவ்வளவு செலவிட்டுள்ளோம் என்று. (comedy ah நினைக்காதீர்கள்)
  • TNPSC ல PASS பண்ணி JOB வாங்குவது உங்கள் கனவு என்றால், ஒவ்வொரு நிமிடமும் விலை மதிப்பற்றது.
  • JOB பார்க்கின்றேன் அதனால்தான் நேரம் கிடைக்கவில்லை என்பவரா நீங்கள்? கொஞ்சம் கடினம் தான். எனக்கும் இந்த நிலை உள்ளது. ஆனால் என் குரு எனக்கு சொன்ன வார்த்தை, உங்களுக்கு சொல்கிறேன். அடுத்த வருடம் இந்நேரம் நாம் அரசு வேலையில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். அப்ப உங்களுக்கு எதுவும் தடையாக தெரியாது. JOB கு ஏற்றவாறு உங்கள் படிக்கும் நேரத்தை ஒதுக்கி கொள்ள வேண்டும்.

படிப்பது மறந்து போகிறது

  • இது தான் பலரின் பிரச்சினை. எப்படி படிப்பது மறந்து போகும்? நமக்கு பிடித்த ஒரு விஷயம் எப்பவும் மறக்காது. அப்ப நீங்க முழு INTEREST எடுத்து படிக்கல.
  • JOB கு போகணுமேன்னு கடமைக்குன்னு படிச்சால் குறுகிய காலத்திலே மறந்து விடும் நிலை ஏற்படும்.
  • ஒரு செயலில் முழு ஈடுபாடு இருந்தால் மட்டுமே அதை நம்மால் சாதிக்க முடியும்.
  • நான் முழு கவனம் செலுத்தி படிச்சாலும் சீக்கிரம் மறந்து விடுகிறதே???? அப்ப நான் சொல்ற TIPS ah follow பண்ணி பாருங்க. maybe நல்ல தீர்வு கிடைக்கலாம்.

TIPS
  • அதிகாலை படிப்பது நல்லது. அப்போது, உங்களைச் சுற்றி அமைதியான சூழல் இருக்கும். இது உங்களை படிக்க தூண்டும். படிக்கும் அறையில், கண்ணாடி இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்களது கவனத்தை சிதறச் செய்யும். கிழக்கு அல்லது வடகிழக்கு நோக்கி அமர்ந்து படியுங்கள். இது உங்களுக்கு, பாசிடிவ் எனர்ஜியை தரும்.
  • பிடிக்காத உணவுசெரிக்காது. பிடிக்காத பாடம் மனதில் பதியாது. இந்த இரண்டும் அறிவியல் உண்மைகள். எனவே இந்த உண்மையை நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள்.
  • சாப்பிட, குளிக்க, உறங்க என நம் உடல் ஒவ்வொரு செயலையும் அதற்கேற்ற நிலைகளில் செய்கிறது. உறங்கும் நிலையில் நாம் படித்தால் விரைவில் நம் உடல் உறக்கத்திற்கு தயாராகிவிடும். எனவே நீண்ட நேரம் படிக்க வேண்டும் என்றால் நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து படியுங்கள்.
  • இன்னும் சிலருக்கு பிடிக்காத பாடத்தை கையில் எடுத்துவிட்டால் போதும். அப்போதுதான் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும். போன் அடிப்பது நன்றாக காதில் கேட்கும். பசி எடுக்கும். தாகமாக இருக்கும். இதெல்லாம் மனம் செய்கிற மாயம். என்ன வந்தாலும் சரி எதற்கும் எழுந்திருக்க மாட்டேன். விடாமல் படிப்பேன் என்பதுதான் இந்த என்ன வந்தாலும் சரி டெக்னிக் இதனால் மெல்ல மெல்ல மனம் ஒன்ற ஆரம்பிக்கும்.

படிக்கும் போது TV பார்க்காதீர்கள். முடிந்தவரை கவனம் சிதறாமல் படிங்கள்.

படித்த பின் உங்களை நீங்களே கேள்வி கேட்டு விடை அளியுங்கள். உற்சாகம் அதிகமாகும்.
கொஞ்ச நேரம் படித்தவுடனே களைப்பாக feel இருந்தால் உங்களுக்கு பிடித்த பாடல் ஒன்றை கேளுங்கள், பிடித்த காமெடி பாருங்கள், உற்சாகம் வந்தவுடன் படிங்கள். ஆனால் படிக்கணும் என்றாலே களைப்பாக இருக்குனு சொன்னால் நீங்க TNPSC கு படிக்கலன்னு அர்த்தம். Because TNPSC எக்ஸாம் அர்த்தம் புரிஞ்சவங்க அப்படி சொல்ல மாட்டங்க.

நமக்கு இருக்க காலம் கொஞ்சம் தான் வேகமா படிக்கணும் அதே நேரத்தில் புரிஞ்சி படிக்கணும். இதை நன்றாக நினைவில் நிறுத்தவும்.

இப்ப இந்த வாரம் படித்ததை, அடுத்த வாரம் ஒருமுறை திருப்புதல் பண்ணி பாருங்க. அடிக்கடி REVISE பண்றதால நாம் படிச்சது அப்டியே நினைவில் நிற்கும்.

வாயில் நுழையாத சொல்லை, மனதில் பதியாத சொல்லை எழுதி எழுதி பழகினால் மனதில் பதியும்.

அதிர்ஷ்டம் என்பது நல்லநேரம் அல்ல.
உழைக்கும் நேரம் என உணருங்கள்.

friends முடியும்னு நினைச்சு முயற்சி பண்ணுங்கள். கண்டிப்பா வெற்றியாகவே முடியும்.

அடுத்த பதிவில் படிக்க தொடங்கினால் தூக்கம் வருவது பற்றியும், மன அழுத்தம் பற்றியும் கூறுகிறேன்.

நன்றி !

கருத்துரையிடுக

0 கருத்துகள்