எழுத்தாளர் பூமணி

  

பூமணி சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய 'அஞ்ஞாடி' என்ற நாவலுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.


எழுத்தாளர் பூமணியின்  இயற்பெயர் : பூ.மாணிக்கவாசகம்.

இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி எனும் ஊரில் பிறந்தார். இவரின் தந்தை பூலித்துரை, தாய் தேனம்மை. தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய எழுத்தாளர். 1971இல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. 

வெக்கை (புதினம்) எழுத்தாளர் பூமணி அவர்களால் எழுதப்பட்ட தமிழ்ப்புதினம் ஆகும். இந்தப் புதினம் 1982 ஆம் ஆண்டு எழுதப்பட்டது ஆகும். வெக்கை சாதிய ஆதிக்கத்தின் தாக்கத்தைப் பற்றிய ஒரு அனுபவமாக இருக்கிறது. இக்கதையை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டது.

இவரது படைப்புகள்:

சிறுகதைத் தொகுப்பு   : வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள்.
புதினங்கள் :   வெக்கை, நைவேத்தியம், வரப்புகள், வாய்க்கால், பிறகு, அஞ்ஞாடி
திரைப்படம் : கருவேலம்பூக்கள், அசுரன் (வெக்கை)

கருத்துரையிடுக

0 கருத்துகள்