இந்திய ரெயில்வேயின் சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் (டி.எப்.சி.சி.ஐ.எல்) ஜூனியர் மானேஜர், ஜூனியர் எக்சிகியூட்டிவ், எக்சிகியூட்டிவ் போன்ற பதவிகளில் 1074 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜூனியர் எக்சிகியூட்டிவ், எக்சிகியூட்டிவ் பதவிக்கு 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களும், ஜூனியர் மானேஜர் பதவிக்கு 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, நேர்முக தேர்வு, மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-5-2021.
விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி, விண்ணப்ப நடைமுறை சார்ந்த விரிவான விவரங்களை இங்கு கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
0 கருத்துகள்