கடலோர காவல் படையில் வேலை

இந்திய கடலோர காவல் படையில் நேவிக் மற்றும் யந்த்ரிக் பதவிகளுக்கு பல்வேறு பிரிவுகளில் 350 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

18 முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பதவிகளை கொடுத்து பன்னிரண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, டிப்ளமோ கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-7-2021. விண்ணப்பிக்கும் நடைமுறை பற்றிய மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://joinindiancoastguard.cdac.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்