அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டத்தைச் சார்ந்தவர் ஜாதவ்பயேங். ‘இந்திய வனமகன்’ என்று இவர் அழைக்கப்படுகிறார். பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே உள்ள மிகப்பெரிய தீவில் தனது கடின உழைப்பால் ஒரு காட்டை உருவாக்கினார்.
1979ல் பிரம்மபுத்திரா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. மரங்கள் இல்லாத தீவில் பாம்புகள் கரை ஒதுங்கின.சில பாம்புகள் இறந்தன. பல பாம்புகள் வெப்பம் தாங்காமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இக்காட்சி ஜாதவ்பயேங்கை மிகவும் பாதித்தது. ஊர்ப் பெரியவர்கள் ‘தீவில் மரங்கள் இல்லாததுதான் காரணம்’ என்றனர். அவரிடம் தீவு முழுவதும் மரம் வளர்க்கும் எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. ஊர் மக்களிடம் தீவில் மரம் வளர்க்கலாம் என்று அவர் கூறிய போது, அதனை யாரும் ஏற்கவில்லை.
- 2012 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவுக்கு 'இந்திய வனமகன் (Forest Man of India) என்னும் பட்டத்தை வழங்கியுள்ளது.
- 2015 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியுள்ளது.
- கௌகாத்தி பல்கலைக்கழகம் 'மதிப்புறு முனைவர்' பட்டம் வழங்கியுள்ளது.
0 கருத்துகள்