தொன்மைத் தமிழகம்

  • முதல் மாந்தன் தோன்றிய இடம் இலெமூரியா.
  • இலெமூரியாவை “மனித நாகரிகத் தொட்டில்” என்பர்.
  • தமிழகம் இன்றுபோல் இல்லாமல், குமரிமுனைக்குத் தெற்கே இன்னும் விரிந்து, குமரிமலை, பஃறுளி ஆறு முதலியவற்றை உள்ளடக்கி இருந்தது.  இச்செய்தியைப் “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள...” எனும் சிலப்பதிகாரப் பாடல் வரிகள் தெளிவாக உணர்த்துகிறது.
  • “திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்” என  தமிழின் பழமை சிறப்பினைப் பெருமிதம் பொங்க பாடியவர் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.

    வாணிகம்:
  •  தமிழர்கள் அறத்தின் வழியே வாணிகம் செய்தார்கள்.  பொருள் ஈட்டுவது  ஒன்றையே  குறிக்கோளாகக்  கொள்ளாதவர்கள்.  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொருள் ஈட்டினர்.
  • நெல், கம்பு, சோளம், கேழ்வரகு,  தினை, சாமை, வரகு முதலிய தானிய வகைகளையும், உளுந்து, கடலை, அவரை, துவரை, தட்டை, பச்சை, கொள்ளு, எள்ளு முதலிய பருப்பு வகைகளையும் தமிழர்கள் விற்றார்கள்.

    கடல் வாணிகம்:
     
  • பொன்னும், மணியும், முத்தும், துகிலும்  கொண்டு கடல் கடந்து வாணிகம் செய்தனர்.
  • கிறித்து பிறப்பதற்கு முன்பே கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரிசியும், மயில்தோகையும், சந்தனமும் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
  • கி.மு.பத்தாம் நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு யானைத் தந்தமும், மயில்தோகையும், வாசனைப் பொருள்களும் அனுப்பப்பட்டன.
  • தமிழர்கள் சாவக நாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.

    மொழித் தொன்மை:
  •  தமிழ்ச்சங்கம் இருந்தது என்ற மரபுச் செய்தி இடைவிடாது இருந்து வருகிறது.  இத்தகைய மரபுச் செய்தி  இந்தியாவில்  வேறெங்குமில்லை என்றார் தனிநாயகம் அடிகளார்.
  • “தமிழ்கெழு கூடல்” என புறநானூறு கூறுகிறது.
  • “தமிழ்வேலி” எனப் பரிபாடல் கூறுகிறது.
  • “கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” என மணிவாசகம் கூறுகிறது.

    ஏற்றுமதியும் இறக்குமதியும்:
  •  பட்டினப்பாலையும், மதுரைக்காஞ்சியும் பண்டைக் காலத்து வாணிகப் பொருள்கள் துறைமுக நகரங்களிலிருந்து ஏற்றுமதி இறக்குமதி ஆன செய்தியைக் கூறுகின்றன. 
  • காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் பொருள்கள் மண்டியும் மயங்கியும் கிடந்ததனைப் பட்டினப்பாலை அடிகள் பின்வருமாறு விளக்குகிறது.
  • நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
    காலின் வந்த கருங்கறி மூடையும்
    வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
    குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
    ...       ...           ...              ....         ....
    ....    மயங்கிய நனந்தலை மறுகு.

    இசைக்கலை: 
  • மனிதன் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கருவி - இசை
  • பண்டையக்காலத் தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது. 
  • தொல்காப்பியமும், சங்க இலக்கியமும், சிலப்பதிகாரமும் இசையின் மரபுகளை வெளிப்படுத்துகின்றன.
  • இசை இலக்கணநூலை “நரம்பின் மறை” என்று தொல்காப்பியம் கூறுகிறது.
  • பாணன், பாடினி, கூத்தன், விறலி போன்றவர்கள் இயலிசை நாடகக் கலைஞர்கள்.
  • தமிழர் வாழ்வில் பிறப்பிலிருந்து இறப்புவரைக்கும் இசையே முதன்மை பெறுகிறது.
  • தாலாட்டு என்பது குழந்தையைத் தொட்டிலிலிட்டுப் பாடுவது.
  • ஒப்பாரி என்பது, இவருக்கு ஒப்பார் ஒருவருமிலர் என்று இறந்தவரைப் பற்றிப் பாடுவது.
  • இன்றைய கர்நாடக இசைக்குத் தாய் நம் தமிழிசையே.
  • “பண்ணொடு தமிழொப்பாய்” என தேவாரம் கூறுகிறது.
  • “பண்ணொடு தமிழொப்பாய்” என தேவாரம் கூறும் வரியின் மூலம்  பண்ணும் தமிழும் பிரிக்க முடியாததொன்று என்று அறியலாம்.
  • தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி எனப் பல்வேறு இசைக் கருவிகளைப் பயன்படுத்தி இன்புற்றனர்.
  • ஐவகை  நிலத்திற்கும் ஐந்திணைக்கும் ஏற்ற பண்ணிசை வகுத்தனர்.
  • குழலினிது யாழினிது என்று இசைபொழியும் கருவிகளை வள்ளுவம் குறிக்கின்றது.

    உழவுத் தொழில்:
     பழந்தமிழகத்தில் உழுபவரே உயர்ந்தோராக மதிக்கப்பட்டனர்.
    “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்கிறது திருக்குறள்.
    “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்கிறது புறநானூறு.
    உழவுக்குச் சிறப்பு பெற்ற நிலம் மருதநிலம் வயலும் வயல் சார்ந்த இடமாக வகைப்படுத்தப்பட்டு இருந்தது.
    தமிழர்கள் மருதநிலத்தின் பெருமை கருதி வேந்தனை முதன்மைப்படுத்தினர்.
    பழந்தமிழர் வாழ்வு:
    அறத்தின் அடிப்படையில் தொடங்கியது பழந்தமிழர் வாழ்வு.
    பழந்தமிழர் அன்பு வழியில் நடந்தனர். அன்பை போற்றியது போலவே வீரத்தையும் போற்றினர்.
    அறத்தைக் கைக்கொண்டதால் வீடு என ஒன்று வேண்டாததாயிற்று.
    “களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே”என்னும் புறப்பாடல் (புறநானூறு) வீரத்தினை முதல் கடமையாக்குகிறது.
    ஓக்கூர் மாசாத்தியார் என்ற பெண்பாற் புலவர், பெண்களின் பெருவீரத்தைப் பாடியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்