10th Tamil | பகுபத உறுப்பிலக்கணம்

பகுபத உறுப்பிலக்கணம்

பதம்(சொல்) இருவகைப்படும். 

அவை 1) பகுபதம்,   2) பகாப்பதம் ஆகும். 

பிரிக்கக்கூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமான சொல் பகுபதம் எனப்படும். இது பெயர்ப் பகுபதம், வினைப் பகுபதம் என இரண்டு வகைப்படும்.

பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.
அவை:  1) பகுதி, 2) விகுதி, 3) சந்தி, 4) சாரியை, 5) விகாரம், 6) இடைநிலை

பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகத்தில் உள்ள பகுபத உறுப்பிலக்கணம் அனைத்தும் ஒரே பக்கத்தில்

இயல்  - 1

1. வளர்ப்பாய் -  வளர் + ப் + ப் +ஆய்

வளர் -  பகுதி

ப் -  சந்தி

ப் - எதிர்கால இடைநிலை

ஆய் -  முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி


2 . கொள்வார்  - கொள் + வ் + ஆர்

கொள் - பகுதி

வ் -  எதிர்கால இடைநிலை

ஆர் -  பலர்பால் வினைமுற்று விகுதி


3.  உணர்ந்த - உணர் +த் ( ந் ) + த் + அ

உணர் - பகுதி

த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம் 

த் -  இறந்தகால இடைநிலை

அ -  பெயரெச்ச விகுதி


4. வந்தனன் - வா (வ) + த் ( ந் )+ த் + அன் + அன்

வா - பகுதி  ' வ ' ஆனது விகாரம்

த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம் 

த் -  இறந்தகால இடைநிலை

அன் -  சாரியை

அன் -  ஆண்பால் வினைமுற்று விகுதி


5. செய்யாதே - செய் + ய் + ஆ + த் + ஏ

செய் - பகுதி

ய் - சந்தி

ஆ -  எதிர்மறை இடைநிலை

த் -  எழுத்துப்பேறு

ஏ -  முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று விகுதி

இயல்  -2

6.விரித்த - விரி + த் + த் + அ

விரி - பகுதி

த்  - சந்த

த் -  இறந்தகால இடைநிலை

அ -  பெயரெச்ச விகுதி


7.  குமைந்தனை  -   குமை +த்(ந் )+ த் + அன்

குமை - பகுதி

த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம்

த் -  இறந்தகால இடைநிலை , அன் - சாரியை

ஐ -  முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி


8.  பாய்வன - பாய் + வ் +அன் +அ

பாய் - பகுதி

வ் -  எதிர்கால இடைநிலை

அன் -  சாரியை

அ -  பலவின்பால் வினைமுற்று விகுதி


9.  நிறுத்தல் -  நிறு +த் + தல்

நிறு - பகுதி

த் - சந்தி

தல் - தொழிற்பெயர் விகுதி


10. கொடுத்தோர் -  கொடு + த் + த் + ஓர்

கொடு - பகுதி

த் - சந்தி

த் -  இறந்தகால இடைநிலை

ஓர் -   பலர்பால் வினைமுற்று விகுதி


இயல் - 3

11. பரப்புமின் - பரப்பு + மின்

பரப்பு - பகுதி

மின் -  முன்னிலை பன்மை வினைமுற்று விகுதி


12. அறைந்தனன் - அறை + த் ( ந் )+ த் + அன் + அன்

அறை - பகுதி

த் - சந்தி - ' ந் ' ஆனது விகாரம்

த் -  இறந்தகால இடைநிலை

அன் - சாரியை

அன் -  ஆண்பால் வினைமுற்று விகுதி


இயல்  - 4

13. பொருத்துங்கள் - பொருத்து + உம் + கள்

பொருத்து - பகுதி

உம் - முன்னிலை பன்மை விகுதி

கள் -  விகுதி மேல் விகுதி


14 . நெறிப்படுத்தினர் -  நெறிப்படுத்து + இன் + அர்

நெறிப்படுத்து - பகுதி

இன் -  இறந்தகால இடைநிலை

அவர்-  பலர்பால் வினைமுற்று விகுதி

பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகத்தில் உள்ள அனைத்து பகுபத உறுப்பிலக்கணம் ஒரே பக்கத்தில் பதிவிறக்கம் செய்ய...

கருத்துரையிடுக

1 கருத்துகள்