குறுந்தொகை TNPSC General Tamil

  • அகநூல்
  • 400 பாடல்கள்
  • தொகுத்தவர் பூரிக்கோ
  • தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை
  • கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
  • குறுந்தொகையில் கடவுள் வாழ்த்து முருகனைப் பற்றியது.
  • முதன் முத­ல் பதிப்பித்தவர் சி.வை. தாமோதரம் பிள்ளை
  • "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படும் நூல்.
  • உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல். ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது.

பாடல்

நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்

பிடிபசி களைஇய பெருங்கை வேழம்

மென்சினை யாஅம் பொளிக்கும்

அன்பின தோழி அவர் சென்ற ஆறே. (37)


திணை: பாலை

துறை:தலைவன் விரைந்து வருவான் எனத் தோழி தலைவியை ஆற்றியது.

பாடலின் பொருள்: 

தோழி தலைவியிடம், "தலைவன் உன்னிடம் மிகுந்த விருப்பம் உடையவன். அவன் மீண்டும் வந்து அன்புடன் இருப்பான். பொருள் ஈட்டுதற்காகப் பிரிந்து சென்ற வழியில், பெண் யானையின் பசியைப் போக்க, பெரிய கைகளை உடைய ஆண்யானை, மெல்லிய கிளைகளை உடைய 'யா' மரத்தின் பட்டையை உரித்து, அதிலுள்ள நீரைப் பருகச்செய்து தன் அன்பை வெளிப்படுத்தும்" (அந்தக் காட்சியைத் தலைவனும் காண்பான்; அக்காட்சி உன்னை அவனுக்கு நினைவுபடுத்தும். எனவே, அவன் விரைந்து உன்னை நாடி வருவான். வருந்தாது ஆற்றியிருப்பாயாக) என்று கூறினாள்.

இப்பாடலில் இறைச்சி அமைந்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்