மறைநீர் (Virtual Water) | 9th Tamil Book Notes for TNPSC, TET, Police Exams


கண்ணுக்குத் தெரியாமல் நாம் இரண்டு வகையில் நீரைப் பயன்படுத்துகிறோம். முதல் வகை நாம் பயன்படுத்தும் பொருள்கள் வழியாக; இரண்டாவது வகை நாம் உண்ணும் உணவின் வழியாக. புலப்படாத் தண்ணீர் என்பது உணவுப் பொருள்களின் உற்பத்தி குறித்தும் அதனை உற்பத்தி செய்ய செலவிடப்பட்ட தண்ணீர்த் தேவை குறித்தும் பேசுவது ஆகும். ஒரு கிலோ ஆப்பிளை உற்பத்தி செய்ய 822லிட்டர் தண்ணீரும் ஒரு கிலோ சர்க்கரையை உற்பத்தி செய்ய 1780லிட்டர் தண்ணீரும் ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய 2500 லிட்டர் தண்ணீரும் ஒரு கிலோ காப்பிக் கொட்டையை உற்பத்தி செய்ய 18,900 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகின்றது.
நீர்வளத்தைப் பாதுகாக்க நாட்டின் மேல்புற நீர்வளம் மற்றும் நிலத்தடி நீர்வளம் குறித்து அக்கறை கொள்ளவேண்டும். 
நீர் அதிகம் தேவைப்படும் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்வதைத் தவிர்த்து தேவைக்கேற்ப இறக்குமதி செய்துகொள்ள வேண்டும். இதனால் நாட்டின் நிலத்தடி நீரும், ஆற்று நீரும் சேமிக்கப்படும்.

(மா. அமரேசன்--கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்)
Previous
Next Post »
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.