ஈரோடு மஞ்சள் புவிசார் குறியீடு பெற்றது

 
இதற்குமுன் மகாராஷ்டிரா மாநில வைகான் மஞ்சள், ஒடிசா கந்தமால் மலை மஞ்சள் ஆகியவை புவிசார் குறியீடு பெற்றுள்ளன.

பத்து ஆண்டு போராட்டத்துக்கு பின், ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

ஈரோடு மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருளின் அளவு அதிகம் உள்ளது. இதனால், மஞ்சளின் நிறம், சுவை, மணம் வேறுபட்டதாக இருக்கும். மேலும், பல்வேறு மருத்துவ குணம் உள்ளதால், இயற்கை மருத்துவம், சித்தா மருத்துவத்தில் பலவித நோய்களுக்கு மருந்து தயாரிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
ஈரோடு மண்ணின் தன்மையை கொண்டு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் காங்கேயம், அன்னூர், தொண்டாமுத்தூர் போன்ற பகுதிகளில் விளையும் மஞ்சளுக்கு ஈரோடு மஞ்சள் என்ற பெயர் பொருந்தும். ஈரோடு விதை மஞ்சளை பிற பகுதியினர் வாங்கிச் சென்று விதைத்தாலும் அதை ஈரோடு மஞ்சளாக கருத முடியாது என புவிசார் குறியீடு பதிவகம் அறிவித்துள்ளது.

ஈரோடு மஞ்சள் புவிசார் குறியீடு பெற்றுள்ளதால், இனி வரும் காலங்களில் சர்வதேச அளவில் மஞ்சள் ஏற்றுமதி, உற்பத்தியில் ஈரோடு மாவட்டம் தனியிடம் பெறும்.

இதற்கு முன்பு, சிறுமலை வாழைப்பழம், விருப்பாச்சி வாழைப்பழம் போன்றவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்