TET-I & TET-II குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் மிக முக்கிய குறிப்புகள்

TNTET Paper-1 & TNTET Paper-2 Exams - 
Child Development & Pedagogy 
 
ஆசிரியர் தகுதித் தேர்வு
குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் மிக முக்கிய குறிப்புகள்
 
நாம் கோபத்தில் இருக்கும்போது நமது முகம் சிவப்பாகிறது. இந்த நடத்தையின் தன்மைகளை அறிய உதவும் முறை - அகநோக்கு முறை.

எவ்வித கருவியும் இன்றி பிறருடைய நடத்தையை அறிந்து கொள்ள உதவும் முறை - உற்று நோக்கு முறை

இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை. மற்றொன்று தூங்காத குழந்தை. இவர்களின் கற்றல் ஒப்பிடுவதற்கு உதவும் முறை - கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை.

கல்வி நிலையங்களில் மாணவர்களின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் முக்கியமான பதிவேடு - திரள் பதிவேடு.

ஒரு மாணவனின் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் தகவல் குறிப்பு வாழ்க்கைத் துணுக்கு முறையோடு தொடர்புடையது.

பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் ஆகும் இதனை கூறியவர் ஏ.குரோ, சி.டி. குரோ.

வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஓர் வகையாகும்? - வினாவரிசை முறை.

ஒருவனுக்குத் தரப்படும் கல்வியும், பயிற்சியும், அவன் வளரும் சூழ்நிலையும் அவனை உருவாக்குகின்றன. ஆனால் மரபு நிலைக்கு எந்த பங்கும் இல்லை எனக் கூறியவர் வாட்சன்.

குழந்தைகளின் உடல் தசைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் வளர்ச்சி - அறிவு வளர்ச்சி.

சிக்கலான மனவெழுச்சிக்குரிய காரணி - கூச்சம். 
 
அறிவு, மனவெழுச்சி, மனப்பான்மை - இவை மூன்றும் சேர்ந்த - வளர்ச்சி.

நுண்ணறிவு முதிர்ச்சி பொதுவாக எந்த வயதில் முடிவடையும் 15 - 16
வயதில்.

ஒவ்வொரு உயிரணுவிலும் உள்ள குரோமோசோம் ஜோடிகளின் எண்ணிக்கை - 23 ஜோடி.

வாழ்க்கையில் சிறப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி - நுண்ணறிவு.

மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் - கால்டன்.

அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் - பியாஜே

உடல் வளர்ச்சியின் வேகம் குமரப்பருவத்தில் நிறைவு பெறும்.

அறிவு வளர்ச்சியின் வேகம் குழவிப் பருவத்தில் அதிகம்.

அடிக்கடி வினா எழுப்பும் பருவம் - பிள்ளைப் பருவம்.

மனவெழுச்சிக்கு காரணமாக அமைவது - உடலியல் தேவைகள்.

பிறவியிலிருந்து தோன்றக் கூடிய மனவெழுச்சி - அச்சம்.

அறிவுத்திறன் வளர்ச்சிக்கு வாயில்களாக இருப்பவை - ஐம்புலன்கள்

மரபுப் பண்புகளில் முழு ஒற்றுமையுடைய இரட்டையர்கள் - இரு கரு இரட்டையர்கள்.

மனிதனின் வளர்ச்சி மற்றும் நடத்தைக்கு முக்கியக் காரணிகள் - மரபு, சூழ்நிலை.

மனவெழுச்சியைப் பாதிக்கும் நேரடிக் காரணி - கவனிப்பின்மை

குழந்தையின் பாலினத்தை முடிவு செய்யும் உயிரியல் கூறு - ஜீன்கள்.

ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதற்கு ஏற்ற வயது - 2 முதல் 7 வயது.

நடத்தையை உற்று நோக்க, பதிவு செய்தல், ஆய்வு செய்தல்

பொதுமைப்படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறை - உற்று நோக்கல் முறை.

புகழ் பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வுகள் எதை வலியுறுத்துகின்றன - சூழ்நிலை.

ஒத்த இயல்பு ஒத்த இயல்பினையே உருவாக்கும் எனக் கூறியவர் மெண்டல்.

ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் அயோவா.

அடலசன்ஸ் எனப்படும் சொல் எந்த மொழிச் சொல் - இலத்தீன்

குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் கார்ல் பியர்சன்.

அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினை உருவாக்கியவர் - எல். தர்ஸ்டன்.

தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை - ஏழு.

முறைப்படுத்தப்பட்ட மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைவது - மரபு.

கருத்துரையிடுக

0 கருத்துகள்