அறிந்து பயன்படுத்துவோம்! - ஏழாம் வகுப்பு தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம்

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்
ஒரு தொடரில் மூன்று பகுதிகள் இடம்பெறும். அவை
1. எழுவாய் 2. பயனிலை 3. செயப்படுபொருள்

ஒரு தொடரில் யார்? எது? எவை? என்னும் வினாக்களுக்கு விடையாக அமைவது எழுவாய்.
(எ.கா.) நீலன் பாடத்தைப் படித்தான்.
பாரி யார்?
புலி ஒரு விலங்கு.
இத்தொடர்களில் நீலன், பாரி, புலி ஆகியன எழுவாய்கள்.


ஒரு தொடரை வினை, வினா, பெயர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடித்து வைப்பது பயனிலை.

(எ.கா.) கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.
கரிகாலன் யார்?
கரிகாலன் ஒரு மன்னன்.
இத்தொடர்களில் கட்டினான், யார், மன்னன் ஆகியன பயனிலைகள்.

யாரை, எதை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வருவது செயப்படுபொருள். 

(எ.கா.) நான் கவிதையைப் படித்தேன்.
என் புத்தகத்தை எடுத்தது யார்?
நெல்லிக்கனியைத் தந்தவர் அதியமான்.
இத்தொடர்களில் கவிதை, புத்தகம், நெல்லிக்கனி ஆகியன செயப்படு பொருள்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்