செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடு

ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்றுவிடுமா? இக்கருத்துகளை ஓட்டிச் செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.
செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடு :
 
இவ்வுலகை மிகுதியாக ஆளக்கூடிய ஒரு தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு. இந்த செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் எவ்வாறு பயன்படப் போகிறது என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம். 
 
வேலைவாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டு வரும். 'ரோபோவிடம்' குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக அலுவலகம் செல்லும் பெற்றோர்களை நாம் பார்ப்போம். வயதானவர்களுக்கு உதவிகள் செய்தும் அவர்களுக்கு உற்ற தோழனாய்ப் பேச்சுக் கொடுத்து பாதுகாக்கும் ரோபோக்கள். செயற்கை நுண்ணறிவுள்ள ரோபோக்களால் மனிதர் செய்ய இயலாத அலுப்புக் தட்டக்கூடிய கடினமான செயல்களைச் செய்யமுடியும் மனித முயற்சியில் உயிராபத்தை விளைவிக்கக் கூடிய செயல்களைச் செய்ய முடியும். புதிய வணிக வாய்ப்புகளைச் செயற்கை நுண்ணறிவு நல்குகிறது. பெருநிறுவனங்கள் தங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன. 
விடுதிகளில் வங்கிகளில் அலுவலகங்களில் தற்போது மனிதர் அளிக்கும் சேவைகளை ரோபோக்கள் அளிக்கும். அதுமட்டுமின்றி நம்முடன் உரையாடுவது ஆலோசனை வழங்குவது பயண ஏற்பாடு செய்து தருவது தண்ணீர் கொண்டு வந்து தருவது உடன் வந்திருக்கும் குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுவது எனப் பலவற்றைச் செய்யும். 
 
எதிர்காலத்தில் நாம் பயணிக்கும் ஊர்திகளைச் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு இயக்க வேண்டியிருக்கும். இத்தகைய ஊர்திகள் ஏற்படுத்தும் விபத்துகள் குறையும். போக்குவரத்து நெரிசல் இருக்காது அதன்மூலம் பயண நேரம் குறையும் எரிபொருளும் மிச்சப்படும். 
இத்தகைய மென்பொருள்கள் கவிதைகள், கதைகள் விதவிதமான எழுத்து நடைகள் போன்றவற்றைக் கற்றுக்கொண்டு மனிதர்களுடன் போட்டியிட்டாலும் வியப்பதற்கில்லை. கல்வித்துறையில் இத்தொழில் நுட்பத்தைப் பலவிதங்களில் பயன்படுத்தும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.
 
மனிதக் கண்டுபிடிப்புகள் அனைத்திலும் நன்மை, தீமை என்று இரண்டு பக்கங்கள் இருக்கும் அதற்கேற்ப மனிதர்கள் தங்களை மாற்றிக்கொண்டு நன்மைக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும். இப்போது உலகில் இங்கொன்றும் அங்கொன்றுமாக பயன்பாட்டில் இருக்கின்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் உலகின் ஒவ்வொரு துறையிலும் அளவிடற்கரிய முன்னேற்றத்தைத் தரும்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. அறிவியல் வளர்ச்சிக்கு எல்லையே இல்லை வளரட்டும் .மனித மூளைக்கு அலுப்பு தட்டும் ஆனால் இயந்திர நுண்ணறிவு மூளைக்கு அலுப்பு தட்டாது

    பதிலளிநீக்கு