இந்தியாவின் பட்ஜெட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

இந்தியாவின் பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) பற்றி அறிந்து கொள்ளுங்கள்
  • பட்ஜெட் என்பது பிரெஞ்சு மொழியிலிருந்து வந்த சொல். இதற்கு தோல் பை என்று அர்த்தம். பர்ஸ் என்றும் கூறுவதுண்டு. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதியை குடியரசுத் தலைவர் முடிவு செய்வார். பட்ஜெட் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும். முதல் பகுதி நாட்டின் பொருளாதார நிலையை விளக்கும். இரண்டாவது பகுதி எந்தெந்த பொருள்களுக்கு வரி விதிக்கப்படுகிறது. எவற்றுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்பதை விவரிக்கும். பொதுவாக பட்ஜெட் பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் தாக்கல் செய்யப்படும்.
முதன்முதலாய்.......

  • இந்தியாவில் முதன் முதலின் 1860 ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையை பிரிட்டன் அறிமுகம் செய்தது. முதலாவது பட்ஜெட்டை நிதிக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் வில்சன் தாக்கல் செய்தார். மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை 1924-ம் ஆண்டு சர் பாசில் பிளாக்கெட் என்பவரால் அறிமுக செய்யப்பட்டது.

  • நாடு சுதந்திரமடைந்தபிறகு 1947-ம் ஆண்டு நவம்பர் 26-ம்  தேதி நிதி அமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டி முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் காலம் ஏழரை மாதங்களாகும்.
  • 1948-49-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்தியா குடியரசான பிறகு முதலாவது பட்ஜெட்டை பிப்ரவரி 28, 1950-ல் நிதி அமைச்சர் ஜான் மத்தாய் தாக்கல் செய்தார். 1955-56-ம் ஆண்டு முதல் பட்ஜெட் உரை ஹிந்தியிலும் தயாரானது.

  • 1958-59-ம் ஆண்டு நிதிப் பொறுப்பை கூடுதலாக கவனித்த பிரதமர் ஜவஹர்லால் நேரு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக தாமாக முன்வந்து வருமானத்தை தெரிவிக்கும் முறையை 1964-65-ம் ஆண்டில் முதன் முதலில் டி.டி.கிருஷ்ணமாச்சாரி அறிமுகம் செய்தார்.
இரு அமைச்சர்கள்
  • 1991-92-ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை யஷ்வந்த சின்ஹா தாக்கல் செய்தார். இறுதி பட்ஜெட்டை  மன்மோகன் சிங் தாக்கல் செய்தார். இரு வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பட்ஜெட் தாக்கல் செய்தது இதுவே முதல் முறை.
10 முறை பட்ஜெட்
  • அதிகபட்சம் பட்ஜெட்டை தாக்கல் செய்த பெருமை மொரார்ஜி தேசாய்க்கு உண்டு. 10 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இவற்றில் 5 முழு பட்ஜெட், 5 இடைக்கால பட்ஜெட்டாகும். தனது பிறந்தநாளில் இரண்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையும் இவருக்கு உண்டு.
கருப்பு பட்ஜெட்
  • 1973-73-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் கருப்பு பட்ஜெட் என்றழைக்கப்பட்டது. அப்போது நாட்டின் நிதிப் பற்றாக்குறை ரூ.550 கோடியாகும்.

    ஆர்.வி.யும் முகர்ஜியும்

  • நாட்டின் நிதியமைச்சராக இருந்து 1987-ம் ஆண்டு குடியரசுத் தலைவரானார் ஆர்.வெங்கட்ராமன். அந்த வழியில் நிதியமைச்சராக இருந்து குடியரசுத் தலைவராகியுள்ளார் பிரணாப் முகர்ஜி.
சேவை வரி
  • 1994-ம் ஆண்டு சேவை வரி முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதை அறிமுகம் செய்தவர் மன்மோகன் சிங்.
ஏழைகளுக்கு
  • ஏழைகளுக்கு அதிகபட்ச சலுகைகளை ஒதுக்கியவர் வி.பி.சிங். 1986-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரயில்வே போர்டர்கள், ரிக்ஷா தொழிலாளிகள், செருப்பு தைப்பவர்கள் ஆகியோர் தொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கச் செய்தார்.
நிறுவன வரி
  • இப்போது குறைந்தபட்ச மாறுதலுக்குள்பட்ட வரி எனப்படும் மேட் வரி விதிப்பை 1987-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர் ராஜீவ் காந்தி.
மாலையிலிருந்து காலை
  • 2000-ம் ஆண்டு வரை பட்ஜெட் மாலையிலேயே தாக்கல் செய்யப்பட்டது. இதை மாற்றி 2001-ம் ஆண்டு பிற்பகல் 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார் யஷ்வந்த சின்ஹா.
பெண் நிதியமைச்சர்
  • நாட்டின் முதலாவது பெண் நிதி அமைச்சர் இந்திரா காந்தி. 1970-71 -ம் ஆண்டில் நிதிப் பொறுப்பை அவர் கூடுதலாக கவனித்தார்.
சின்ஹாவும் சிக்கலும்
யஷ்வந்த் சின்ஹா நிதி அமைச்சராக இருந்தபோது சிக்கலும் தொடர்ந்து இருந்தது. 1990-91-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மோசமாக இருந்தது. இதனால் தங்கத்தை அடகு வைக்க வேண்டி நிலை ஏற்பட்டது. 1999-ம் ஆண்டு பொக்ரான் அணுகுண்டு சோதனை காரணமாக சர்வதேச தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 2000-ம் ஆண்டு கார்கில் போர் மூண்டது. 2001-ல் குஜராத்தில் பேரழிவை ஏற்படுத்திய பூகம்பம் உருவானது. அறிவித்த வரி விதிப்புகளை அதிகபட்சம் திரும்பப் பெற்ற பெருமை யஷ்வந்த் சின்ஹாவையே சாரும். 2002-ம் ஆண்டு பட்ஜெட்டில் இது நடந்தது.

300லிருந்து 50
  • இறக்குமதி வரி 300 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகக் குறைக்கப்பட்டது 1991 -92-ம் ஆண்டு. தாராளமயமாக்கல் கொள்கையைக் கொண்டு வந்து இறக்குமதி வரியைக் குறைந்த பெருமை அப்போது நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங்கையே சாரும்.

ஒரு முறை
  • ஒரே ஒரு முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள் பட்டியலில் ஜவஹர்லால் நேரு. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சரண் சிங், என்.டி. திவாரி. மது தண்டவதே. எஸ்.பி. சவாண். சசிந்திர சௌத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மத்திய நிதி அமைச்சராக 35 நாள்கள் இருந்த கே.சி.நியோகி பட்ஜெட்டை தாக்கல் செய்யாத நிதி அமைச்சராவார். ரிசர்வ் வங்கியின் முதலாவது கவர்னராயிருந்த சி.டி.தேஷ்முக். மத்திய நிதியமைச்சராகி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இவரது வழியில் மன்மோகன் சிங்கும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

அல்வா விழா
  • பட்ஜெட் தயாரிப்புப் பணி தொடங்குவதற்கு முன்பாக அல்வா விழா கொண்டாடப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்புப் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களும் நிதி அமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக்கில் இரவு பகலாக தங்கி பட்ஜெட்டை தயாரிப்பர். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கும், வெளியாருக்குமான தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்படும். பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் தாக்கல் செய்த பிறகே இப்பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவர். இந்த நடைமுறை காலம் காலமாக கடைபிடிக்கப்படுகிறது. பணியாளர்களின் உடல் நலனுக்காக இந்த நடைமுறை காலம் காலமாக கடைபிடிக்கப்படுகிறது. பணியாளர்களின் உடல் நலனுக்காக மருத்துவக் குழுவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும்.

  • 10 ஆண்டுகளில் 3 முறை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1991-92-ல் மற்றும் 1998-99-ல் யஷ்வந்த் சின்ஹாவும், 1996-97-ல் மன்மோகன் சிங்கும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தனர்.

171 கோடி

  • முதல் பட்ஜெட்டில் அரசின் மொத்த வருவாய் ரூ.171.15 கோடி. இதில் ரூ. 15.9 கோடி தபால் தந்தித்துறை மூலமாக வந்தது. அரசின் மொத்த செலவு ரூ. 197.39 கோடி. அப்போது ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 92.74 கோடி. நிதிப் பற்றாக்குறை ரூ.24.59 கோடியாக இருந்தது. அப்போது பருத்தி மீதான ஏற்றுமதி வரி 3 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

கிருஷ்ணமாச்சாரி, கல்தோர் பட்ஜெட்
  • நிதி அமைச்சராக இருந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஹங்கேரியைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் நிகோலஸ் கல்தோரின் ஆலோசனைப்படி பட்ஜெட் தயாரித்தார். ஐடிபிஐ வங்கி அமைவதற்கு காரணமாக இருந்தார்.

கனவு பட்ஜெட்
  • 1997-98-ம் நிதி ஆண்டில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட் கனவு பட்ஜெட் என வர்ணிக்கப்பட்து. பொருளாதார சீர்திருத்தம், வருமான வரி குறைப்பு, நிறுவனங்கள் மீதான சர்சார்ஜ் நீக்கம் என பல அம்சங்களை இந்த பட்ஜெட் கொண்டிருந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்