இந்திய தேசியக் கொடி

  • தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்காலி வெங்கையா என்ற சுதந்திர போராட்ட தியாகி ஆவார்.
  • 1947 - ம் ஆண்டு சூலை மாதம் 22 - ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டு அதே ஆண்டு ஆகஸ்டு 14 - ஆம் தேதி நம் நாட்டிற்கு வழங்கப்பட்டது.
  • செவ்வக வடிவுள்ள தேசியக் கொடியின் நீள, அகல விகிதம் 3 : 2 ஆகும். 
  • கொடியின் மேல் உள்ள இளஞ்சிவப்பு நிறமானது தியாகத்தையும், தைரியத்தையும் சுதந்திரப்போராட்ட வீரர்களின் தியாகத்தையும் குறிக்கிறது. 
  • நடுவில் உள்ள வெண்மை நிறம் தூய்மையை / உண்மையைக் குறிக்கிறது. வெண்மைப்பகுதியில் கருநீலநிறத்தில் அமைந்துள்ள சக்கரம் அறவழியில் முன்னேறிச் சென்று அமைதியினையும், செழுமையினையும் பெற்றுத்தர தூண்டுகிறது.

  • இந்த சக்கரத்தின் வடிவம் சாரநாத் அசோகத்தூணின் தலைப்பகுதிக்குக் கீழ் உள்ள வடிவமாகும். சக்கரத்தின் விட்டமும், வெள்ளைப்பட்டையின் அகலமும், சரிசம வீதத்தில் உள்ளது.
  • வெள்ளைப் பகுதியில் கருநீலத்தில் உள்ள 24 ஆரங்கள் கொண்ட அசோக சக்கரம் இயக்கத்தையும், தலைமை பண்பையும் குறிக்கிறது.
  • கீழே உள்ள கரும்பச்சை நிறம் இந்தியாவின் செழிப்பையும், வளமான
    நிலத்தையும், பசுமைனையும், நம்பிக்கையினையும் குறிக்கின்றது.

    கொடியைப் பற்றி விதிமுறைகள்:
  • வேறு எந்த ஒரு கொடியையும் நமது தேசியக்கொடியின் வலதுபுறம்
    அல்லது கொடியை விட உயரமாகவோ பறக்கவிடக் கூடாது. 
  • கம்பத்தின் உச்சி வரை கொடி உயர்ந்திருக்க வேண்டும். 
  • சூரியன் மறைவிற்குள் தேசியக் கொடியை இறக்கிவிட வேண்டும்.
  • நமது நாட்டின், தலைவர் இறந்து விட்டாலோ அல்லது நட்பு நாட்டின் தலைவர் இறந்துவிட்டாலோ நமது தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்