பாஸ்டேக் என்றால் என்ன?

வண்டியின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் 'பாஸ்டேக்' (FASTag) ஸ்டிக்கர் மூலம்  ஒவ்வொரு முறை சுங்கச்சாவடியை வாகனம் கடக்கும்போது தானாக சுங்கக்கட்டணம் கழிக்கப்படும்.

இதற்கான ஆப்-ஐ டவுன்லோடு செய்து அதில் வங்கிக்கணக்கை இணைத்து ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதில் போஸ்ட் பெய்டு, ப்ரீபெய்டு என இரு முறையும் உண்டு. 

பாஸ்டேக் ஸ்டிக்கரில் வாகனத்தின் பதிவெண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பார்கோடு இருக்கும். சுங்கச்சாவடியில் உள்ள ஆன்டெனாவால் இது டிகோட் செய்யப்பட்டு பாஸ்டேக் கணக்கிலிருந்து கட்டணத் தொகை கழித்துக்கொள்ளப்படும்.

சுங்கச்சாவடிகளில் அனைத்து வழித்தடங்களும் பாஸ்டேக் ஒட்டப்பட்ட வாகனங்களுக்கான வழியாக இருக்கும். ரேடியோ-அதிர்வெண் அடையாளம் (RFID) மூலம் பாஸ்டேக் செயல்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்