Featured post

சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள்

படம்
சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள் (அணங்குகள்) 1. வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி பிடர்த்தலை பீடத்தில் ஏறிய - கொற்றவை 2. கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி 3. இறைவனை நடனமாடச் செய்தவள் - பத்ரகாளி 4. அச்சம் தரும் காட்டை விரும்பும் வீடாகக் கொண்டவள் - காளி 5. தாருகன் என்ற அசுரனின் மார்பை மிளந்தவள் - துர்க்கை 10th Tamil Text Book - Silapathikaram

கட்சி முறைகளின் வகைகள்

மூன்று வகையான கட்சி முறைகள் நடைமுறையில் இருக்கின்றன.


ஒரு கட்சி முறை :

இம்முறையில் ஒரே அரசியல் கட்சி மட்டும் அரசாங்கத்தை ஏற்படுத்தும் உரிமையைக் கொண்டிருக்கும். இவ்வகையான ஒரு கட்சி முறை சீனா , வடகொரியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் நடைமுறையில் இருக்கின்றன.

இரு கட்சி முறை :

இம்முறையில் இரண்டு கட்சிகள் அதிகாரத்தை பங்கு கொள்ளும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இவற்றில் ஒன்று ஆளும் கட்சியாகவும் மற்றொன்று எதிர்க்கட்சியாகவும் செயல்படும். இருகட்சி முறை பிரிட்டன் (தொழிலாளர் கட்சி மற்றும் பழமைவாதக் கட்சி) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி) காணப்படுகின்றன.

பல கட்சி முறை :

அதிகாரத்திற்கான போட்டி மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளிடையே இருக்குமாயின் அது பல கட்சி முறை என அழைக்கப்படுகிறது.  இம்முறை இந்தியா பிரான்ஸ், ஸ்வீடன், நார்வே உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகிறது.


இந்தியாவில் அரசியல் கட்சி முறை

இந்தியாவில் கட்சி முறை பத்தொ ன்பதா ம் நூற்றா ண்டின் பிற்பகுதியில் தோன்றியது. கூட்டாட்சி அமைப் பினை பின்பற்றும் நாடுகளில் இருவகையான கட்சிகள் காணப்படுகின்றன.

உண்மையில் இந்தியாவில், உலகின் அதிக எண்ணிக்கையிலான கட்சிகள் காணப்படுகின்றன. இந்தியாவில் கட்சிகள் மூன்று படிநிலையில் அமைந்திருப்பதை நாம் காணலாம். அவை தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத (சுயேட்சைகள்) கட்சிகள் ஆகும். ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.


கட்சிகள் அங்கீகரிக்கப்படுவதற்கான நிபந்தனைகள்

இந்தியாவில் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது.

தேசியக்கட்சிகள்

  • மக்களவைத் தேர்தலில் அல்லது நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் செல்லத்தக்க மொத்த வாக்குகளில் ஒரு கட்சி 6% வாக்குகளை பெற்றிருத்தல் வேண்டும்.
  • ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களில் நான்கு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
  • இறுதியாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் குறைந்தபட்சம் மூன்று மாநிலங்களில் 2% தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.


பிராந்திய/மாநிலக்கட்சிகள்

  • மாநில சட்டப் பேரவைக்கான தேர்தலில் செல்லத்தக்க வாக்குகளில் குறைந்த பட்சம் 6% வாக்குகளை பெற்றிருத்தல் வேண்டும்.
  • 25 தொகுதிகளுக்கு ஒரு மக்களவைத் தொகுதி அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
  • மாநில சட்டமன்ற மொத்த தொகுதிகளில் 3% தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.


சுயேட்சை வேட்பாளர்

  • சுயேட்சை வேட்பாளர் என்பவர் எந்த கட்சியிலும் சேராமல் தானாக மக்களவை அல்லது மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நபர் ஆவார்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்

பெரும்பான்மைக் கட்சி

சிறியக்கட்சி

எதிர்க்கட்சி  

தேர்தல் குழு சின்னங்கள்

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

9ஆம் வகுப்பு தமிழ் | மொழிப் பயிற்சி