Featured post
உற்பத்தி | பொருளாதாரம்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
உற்பத்தியின் வகைகள்
உற்பத்தியில் மூவகை உள்ளன. அவையாவன:
1. முதன்மை நிலை உற்பத்தி
2. இரண்டாம் நிலை உற்பத்தி
3. மூன்றாம் நிலை உற்பத்தி
1. முதன்மை நிலை உற்பத்தி
இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை, நேரடியாகப் பயன்படுத்திச் செய்கின்ற செயல்பாடுகளுக்குட்பட்ட நிலையை முதன்மை நிலை உற்பத்தி என்கிறோம். முதன்மை நிலையில் வேளாண்மைக்கு முதலிடம் அளிக்கப்படுவதால், இதனை வேளாண்மைத் துறை உற்பத்தி எனவும் கூறுவர்.
வேளாண்மையும் அதனுடன் தொடர்புடைய செயல்கள், வனங்களைப் பாதுகாத்தல், மீன் பிடித்தல், சுரங்கத் தொழில், எண்ணெய் வளங்களைப் பிரித்தெடுத்தல் போன்ற செயல்பாடுகள் முதன்மை நிலை உற்பத்தியுள் அடங்கும். இந்தச் செயல்பாடுகளை மேற்கொள்ளும் தொழிற்சாலைகள், பூமியின் மேற்பரப்பிலிருந்தும் ஆழ்கடலிலிருந்தும் இயற்கை வளங்களைப் பிரித்தெடுக்கின்றன.
நம் இந்தியாவில் கலப்பு பொருளாதார நிலை காணப்படுகிறது. அதாவது,
பொருளாதாரத்தில் தனியார் துறை நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும்
ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக