குழந்தைத் தொழிலாளர், அமைப்புச் சாரா தொழிலாளர்கள்

Child Labour Economic Issues Group 2 Exam in Tamil

 

குருப்-2, மெயின் தேர்வு - வினா 

குழந்தைத் தொழிலாளர்(Child Labour- Economic issues); அமைப்புச் சாரா தொழிலாளர்கள் (UNORGANISED WORKERS) பற்றி விரிவாக எழுதுக.

குழந்தைத் தொழிலாளர் பற்றிய அறிக்கை - 1978-79:

குழந்தைகள் ஒரு பிரிவினர் ஊதியம் பெற்றோ, பெறாமலோ உழைப்பில் பங்கெடுத்தல் - குழந்தைத் தொழிலாளர். 

ஆறு வயது முதல் 15 வயது வரை - குழந்தைத் தொழிலாளர்.

பள்ளிக்குச் செல்லாமல் உழைக்கும் குழந்தை, ஒரு வேலை அளிப்பவரிடம் வேலை செய்து அல்லது ஒரு தொழிற்பயிற்சியை பயிலுவராகக் கற்றுக்கொள்வது.

குழந்தைத் தொழிலாளி என்பது :

1. ஒரு பொருளாதாரப் பயிற்சி 

2. சமூக கொடுமை

இந்தியாவில்தான் அதிகமான குழந்தைத் தொழிலாளர்களிருப்பதாகப் பொதுவான கருத்து.

குழந்தைத் தொழிலுக்கான களங்கள்:

1. கமபளம் நெய்தல்,
2. பட்டாசுத் தொழிற்சாலை,
3. பீடி சுற்றுதல்,
4. உணவு விடுதிகள்,
5. மோட்டார் பழுதுபார்த்தல்,
6. கல்லுடைத்தல்,
7. காகிதம் பொறுக்குதல்,
8. வீட்டுவேலை செய்தல்,
9. பிச்சை எடுத்தல்.

குழந்தைத் தொழிலுக்கான காரணங்கள் :

1. ஏழ்மை (முக்கிய காரணம்)
2. பெற்றோரின் குறைந்த வருமானம்,
3. பெற்றோரின் எழுத்தறிவின்மை மற்றும் அறியாமை,
4. பொருளாதாரத் தேவைகள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்