Featured post

சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள்

படம்
சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள் (அணங்குகள்) 1. வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி பிடர்த்தலை பீடத்தில் ஏறிய - கொற்றவை 2. கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி 3. இறைவனை நடனமாடச் செய்தவள் - பத்ரகாளி 4. அச்சம் தரும் காட்டை விரும்பும் வீடாகக் கொண்டவள் - காளி 5. தாருகன் என்ற அசுரனின் மார்பை மிளந்தவள் - துர்க்கை 10th Tamil Text Book - Silapathikaram

தேசிய மின்னாட்சி திட்டம் (NeGP) பற்றி விவரித்து எழுதுக

EXPLAIN ABOUT NATIONAL E-GOVERNANCE PLAN.

தேசிய மின்னாட்சி திட்டம் (NeGP)

தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தின் (Information and Communication Technology-ICT) பயன்களை கடைசி குடிமகனுக்கும் எடுத்துச்செல்வதால், வெளிப்படைத்தன்மையான, உரிய நேரத்தில் மற்றும் தடையற்ற பொதுமக்கள் சேவையை வழங்கும் பொருட்டு, 1990-களின் இறுதி வாக்கில் இந்திய அரசு மின்-ஆளுமை திட்டங்களைத் துவக்கியது. 

இதன் பிறகு, நாட்டில் மின்-ஆளுமை திட்டங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான இலக்கு சார்ந்த திட்டங்கள் (Mission Mode Projects - MMPs) மற்றும் அதன் பகுதிகளையும் உள்ளடக்கிய தேசிய மின்-ஆளுமை திட்டத்திற்கு (National e-Governance Plan NeGP) மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Department of Electronics and Information Technology DeitY), நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்க்கும் துறைகள் (Department of Administrative Reforms and Public Grievances - DAR & PG) ஆகியவை இந்த தேசிய மின்-ஆளுமை திட்டத்தை வகுத்துள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

9ஆம் வகுப்பு தமிழ் | மொழிப் பயிற்சி