இந்தியாவில் பணம் எவ்வாறு அச்சிடப்படுகிறது?


இந்தியாவில் 1917-ல்தான் முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன. 

1935-ல் பணப்பொறுப்பு அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்தது. அதன்பிறகு 500 ரூபாய் நோட்டு பணத்தை அறிமுகப்படுத்தியது.

1940-ல் மீண்டும் ஒரு நோட்டுகளை வெளியிட்டது. 

1947-ம் ஆண்டுவரை ஆறாம் ஜார்ஜின் உருவம் பொறித்த பணமே புழக்கத்தில் இருந்தது. 

சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசால் நோட்டுகள் வெளியிடப்பட்டன.

ஆங்கிலேய அரசு, 1925ல் மகாராஷ்ட்டிர மாநிலத்தில் உள்ள நாசிக்கில் ஒரு அச்சகத்தை அமைத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க தொடங்கியது.

மத்தியப்பிரதேசத்திலுள்ள தேவாஸில் 1974-ல் ஓர் அச்சகம் தொடங்கப்பட்டது. இந்த இரு அச்சகங்களைத் (Security Printing and Minting Corporation of India Ltd,) தவிர, 1990களில் கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரிலும், மேற்கு வங்காளத்திலுள்ள சல்பானியிலும் ரூபாய் மற்றும் வங்கிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அச்சடிக்க மேலும் இரு அச்சகங்களை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்