பகுதி-ஆ இலக்கியம் | திருக்குறள்

திருக்குறள் தொடர்பான செய்திகள்மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் இருபத்தைந்து அதிகாரம் மட்டும்

திருக்குறள்

  • திருக்குறள் ‍= திரு + குறள்
  • இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது.
  • திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார்.
  • திருக்குறள் முப்பால்களை கொண்டது

அவை

  1. அறத்துப்பால்
  2. பொருட்பால் 
  3. காமத்துப்பால்

1. அறத்துப்பால் -  38 அதிகாரங்கள், 4 இயல்கள்

பாயிரவியல் - 4 அதிகாரங்கள்

இல்லறவியல் - 20 அதிகாரங்கள்

துறவறவியல் - 13 அதிகாரங்கள்

ஊழியல் - 1 அதிகாரம்


2. பொருட்பால் -
70 அதிகாரங்கள் - 3 இயல்கள்

அரசியல் ‍- 25 அதிகாரங்கள்

அங்கவியல் -32 அதிகாரங்கள்

ஒழிபியல் - 13 அதிகாரங்கள்


3. காமத்துப்பால்
- 25 அதிகாரங்கள் -2 இயல்கள்

களவியல் - 7 அதிகாரங்கள்

கற்பியல் - 18 அதிகாரங்கள்

  • திருக்குறள் 133 அதிகாரங்களையும் 1330 குறள்களையும் கொண்டது.
  • திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைத்துள்ளன.
  • திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது
  • உலக மொழியில் உள்ள அறநூல்களில் முதன்மையானது திருக்குறள்.
  • இது பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • உலக மொழிகளில் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள் நூற்றெழு(107) மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி இதில் நாலு என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளின் அருமையையும் விளக்குகிறது.
  • மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812-இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.

மேலும் படிக்க... பதிவிறக்கம் செய்ய

கருத்துரையிடுக

0 கருத்துகள்