திருக்குறள் - TNPSC Group IV General Tamil
ஒப்புரவறிதல்
1. கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு.
2. தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
விளக்கம்: ஒருவன் தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து சேர்த்த செல்வத்தை தான் மட்டும் அனுபவிக்காமல் பிறர்க்கு கொடுத்து உதவ வேண்டும்.
3. புத்தே ளுலகத்து மீண்டும் பெறலரிதே
ஒப்புரவி னல்ல பிற.
விளக்கம்: பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல இவ்வுலகில் வேறு ஒன்றும் இல்லை.
செத்தாருள் வைக்கப் படும்.
5. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
விளக்கம்: மக்களுக்கு பயன்படும் கிணற்றில் நீர் நிறைந்து இருப்பது போல பிறர்க்கு உதவுபவரின் செல்வமும் குறையாது.
6. பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றாற் செல்வம்
நயனுடை யான்கட் படின்.
விளக்கம்: ஊர் நடுவே இருக்கும் மரத்தின் பழம் எல்லார்க்கும் பயன்படுவது போல, உதவி செய்பவரின் செல்வமும் பயன்படும்.
7. மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்.
8. இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.
விளக்கம்: பிறர்க்கு உதவி செய்யும் குணம் உடையவர் தன்னிடம் பொருள் இல்லாத வறுமையாக இருந்தாலும் உதவி செய்ய தயங்கமாட்டார்கள்.
9. நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு.
விளக்கம்: பிறர்க்கு உதவும் இயல்பு உடையவர் உணவு பொருள் இல்லாத நிலையை வறுமை என்று கருதமாட்டார். பிறர்க்கு உதவ முடியாத நிலையை வறுமை என்று கருதி வருந்துவர்.
10. ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.
விளக்கம்: பிறர்க்கு உதவுவதால் தன் செல்வம் அழியும் நிலை வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் தன்னை விற்றாவது பிறர்க்கு உதவி செய்பவருக்கு புகழ் கிடைக்கும்.
0 கருத்துகள்