TNPSC சான்றிதழ் சரிபார்ப்பின் போது....
மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கு....
Thanks to Gopi S
மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கு....
Thanks to Gopi S
நேற்று நடந்த (11.04.2017) சான்றிதழ் சரிபார்ப்பின் போது நேரில் பார்த்து மனவேதனையுடன் பதிவிடுகிறேன்.. நடக்கவே முடியாத.. கையில் குழந்தை போல் தூக்கிவரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சரியான வழிகாட்டி விழிப்புணர்வு இல்லாமல் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மட்டும் எடுத்து வந்தனர்.
ஆனால் அவர்களிடம் மாவட்ட அரசு மருத்துவனையில் உள்ள மூன்று_மருத்துவக்குழு_ அடங்கிய_மருத்துவ அமர்வு_ வழங்கிய_ சான்றிதழ்_ TNPSC_ஆல்_கேட்கப்பட்டது_ எனவே அவர்கள் கால அவகாசத்துடன் திருப்பி அனுப்பப்பட்டனர்..
ஒரு சிலர் அம்மருத்துவக்குழு மூன்று பேர் கையெழுத்து இட்ட சான்றும் கொண்டு வந்திருந்தனர் ஆனால் அதுவும் நிராகரிப்பு. காரணம் அது TNPSC க்கான LETTER FORMAT ல் இல்லை என கூறினர்.
இவ்வாறு திருப்பி அனுப்பப்ட்டவர்கள் ஒவ்வொருவரும் மதுரை.. தேனி.. போன்ற தொலைவிலிருந்து வந்தவர்களும் கூட..
அதனால் இனி எந்த மாற்றுத்திறனாளி நண்பர்களும் அலைச்சல் இல்லாமல் ஒரே தடவையில் சென்று நல்லபடியாக TNPSC சென்று வர கீழ்கண்ட சரியான மருத்துவ விவரங்களை பதிவிடுகிறேன்..
1. உங்களது ஊனத்தின் விழுக்காடு அதில் எழுதி இருக்க வேண்டும்.
2. எந்த தேர்விற்கு தகுதியானீர்களோ அந்த வேலைக்கு இவரது ஊனம் எந்த விதத்திலும் தடையாக இருக்காது
என தெளிவாக மருத்துவரால் எழுதி இருக்க வேண்டும்.
அதாவது GROUP 4 என்றால் GROUP 4 பதவிக்கு என எழுதியிருக்க வேண்டும்.
3. மெடிக்கல் போர்டிடம் வாங்கும் சான்றிதழில் நீங்கள் எந்த வேலைக்காக வாங்குகிறீர்கள் என்பதனை குறிப்பிட்டு வாங்க வேண்டும். (எடுத்துக்காட்டு: CCSE-4 இளநிலை உதவியாளர் (Junior Asst), CCSE-4 -தட்டச்சர் (Typist) இது போல்).
4. கீழ்கண்ட மருத்துவ மாதிரி சரியானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த கடித FORMAT ஏற்றுக்கொள்ளப்பட்டது.. இதில் தான் எல்லாமே வர வேண்டும்.
5. உங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டையும் சேர்த்து காண்பிக்க வேண்டும்.
6. உங்களது மாற்றுத்திறனாளி புகைப்படம் ஒட்ட இடமிருந்தால் ஒட்டுங்கள்..
அந்தந்த மாவட்ட மருத்துவமனைகளில் கிடைக்கும்.
அல்லது கீழ்கண்ட இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
https://www.4shared.com/o…/GlQSaIPngm/Format_PH__1___2_.html
இது குறித்த மேலும் தகவல்களுக்கு தம்பி Ganesh Ganesh மற்றும் தம்பி Gopi S இருவரையும் அணுகவும்.
(மாற்றுத் திறனாளி சான்றிதழ் குறித்த சந்தேகங்களுக்கு மட்டும்)
நன்றி!
அன்புள்ள
அஜி, சென்னை.
0 கருத்துகள்