தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களும், பணிகளும் :


1. பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், குடியரசுத்
தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர், ஆகியோரின் தேர்தலுக்கு உண்டான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரிக்கிறது.
2. மேற்கண்ட தேர்தல்களை நடத்துகிறது, கண்காணிக்கிறது, நெறிப்படுத்துகிறது மற்றும் கட்டுப்படுத்துகிறது.

3. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் வழங்குகிறது. அது தொடர்பாக எழும் தகராறுகளைத் தீர்த்து வைக்கிறது.

4. பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதியின்மை குறித்து முறையே, குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோருக்கு ஆலோசனை வழங்குதல்.

5. சில சூழ்நிலைகளில் தொகுதி முழுமைக்கும் மறு வாக்கெடுப்பு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம்.

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் (Independence of Election Commission) : 

சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் தேர்தல் ஆணையம் செயல்படும் பொருட்டு கீழ்கண்ட வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளன. அவை:

1. தலைமைத் தேர்தல் ஆணையரை ஓர் உச்சநீதிமன்ற நீதிபதியை எவ்வாறு நீக்க முடியுமோ அந்த நடைமுறைகளைப் பின்பற்றி மட்டும்தான் நீக்க முடியும். பிற தேர்தல் ஆணையர்களை தலைமைத் தேர்தல் ஆணையரின் பரிந்துரையின் பேரில் தான் நீக்க முடியும்.

2. தலைமைத் தேர்தல் ஆணையாளரின் பணி நிலைகளும், பணிபற்றிய விதிகளும் அவர் நியமனம் செய்யப்பட்ட பிறகு அவருக்குப் பாதகமான முறையில் மாற்றப்படக் கூடாது.

மேற்கண்ட வழிமுறைகள் தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவும், நடுநிலையோடும் செயல்படத் துணைப் புரிகின்றன.

குறைபாடுகள் :

1. தேர்தல் ஆணையர்களின் தகுதிகளை அரசியலமைப்பு வரையறை செய்யவில்லை.

2. ஆணையர்களின் பதவிக்காலமும் அரசியலமைப்பில் வரையறை செய்யப்படவில்லை. பாராளுமன்றத்தின் சட்டமே பதவிக் காலத்தை முடிவு செய்யும்.

3. பணி ஓய்விற்குப் பிறகு தேர்தல் ஆணையர்கள் அதே பொறுப்புக்களில் பணியாற்றத் தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

மேற்கண்டவை தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான, நேர்மையான மற்றும் நடுநிலைமையான செயல்பாடுகளுக்கு உடன்பாடில்லாதவையாகும்.

குடியரசுத் தலைவர் குறித்த தகவல்களும் விதிகளும்
இந்திய அரசியலமைப்பு | அதிகம் அறியப்படாத தகவல்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்