VAO தேர்வுக்கு மிகுந்த பயனளிக்க கூடிய "புயல் எச்சரிக்கை சின்னங்கள்" பற்றிய விரிவான விளக்க குறிப்புகள்:
புயல் எச்சரிக்கைக் குறித்து அந்தந்த துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். இதன்படி,
புயல் எச்சரிக்கை கூண்டுகள் எண் – 1 மற்றும் 2 :
புயல் தொலைதூரத்தில் இருப்பதை குறிக்கும்.
கூண்டு எண் -3 :
துறைமுகங்களில் வழக்கத்தைவிட அதிகமாக காற்று வீசுவதை குறிக்கும்.
கூண்டு எண் – 4 :
கடலில் புயல் உருவாகியுள்ளதை குறிக்கும்.
கூண்டு எண் – 5, 6, 7 :
புயல் தீவிரமடைவதை குறிக்கிறது. மேலும் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.
கூண்டு எண் – 8, 9, 10 :
பெருத்த அபாய எச்சரிக்கை – மணிக்கு 120 முதல் 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதை குறிக்கும்.
0 கருத்துகள்