பா எத்தனை வகைப்படும்?
பாவும் ஓசையும்
- வெண்பா - செப்பல் ஓசை (வெள்ளோசை)
- ஆசிரியப்பா - அகவல் ஓசை
- கலிப்பா - துள்ளல் ஓசை
- வஞ்சிப்பா - தூங்கல் ஓசை
- செப்பலோசை வகை மூன்று:
1. வெண்சீர் வெண்டளை மட்டும் வருவது - ஏந்திசைச் செப்பல்
2. இயற்சீர் வெண்டளை மட்டும் வருவது - தூங்கிசைச் செப்பல்
3. இவ்விரு தளையும் கலந்து வருவது - ஒழுகிசைச் செப்பல்
- அகவல் ஓசை வகை மூன்று:
1. நேரொன்றாசிரியத் தளை மட்டும் வருவது - ஏந்திசை அகவல்
2. நிரையொன்றாசிரியத் தளை மட்டும் வருவது - தூங்கிசை அகவல்
3. இவ்விரு தளையும் கலந்து வருவது - ஒழுகிசை அகவல்
- துள்ளல் ஓசை வகை மூன்று:
1. கலித்தளை மட்டும் வருவது - ஏந்திசைத் துள்ளல்
2. கலித்தளையும் வெண்டளையும் வருவது - அகவல் துள்ளல்
3. கலித்தளையும் பிற தளைகளுமாக வருவது - பிரிந்திசைத் துள்ளல்
- துங்கல் ஓசை வகை மூன்று:
1. ஒன்றிய வஞ்சித் தளை மட்டும் வருவது - ஏந்திசைத் தூங்கல்
2. ஒன்றாத வஞ்சித் தளை மட்டும் வருவது - அகவல் தூங்கல்
3. இவ்விரு தளைகளுடன் பிற தளைகளும் வருவது - பிரிந்திசைத் தூங்கல்
0 கருத்துகள்