ஆஸ்கார் விருதுச் சிலையை முதன் முதலில் உருவாக்கியவர் ஜார்ஜ் ஸ்டான்லி என்ற அமெரிக்க சிற்பி.
ஆஸ்கார் விருதுச் சிலையின் எடை 3.856 கிலோ
ஆஸ்கார் விருதுச் சிலையின் உயரம் 34.3 செ.மீ.
ஆஸ்கார் விருதை வழங்கும் அகாடமி அவார்டு ஆப் மோஷன் பிக்சர்ஸ்'. இந்த நிறுவனம், ஆரம்ப காலத்தில் யு.எஸ்.அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட் அண்ட் சயின்ஸ் என்று அழைக்கப்பட்டது.
ஆண்டு தோறும் ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டுமே நடக்கும். ஆரம்பத்தில் 1928-ம் ஆண்டு ஆஸ்கார் விருது திரைப்படத்துறையின் 13 பிரிவுகளுக்கு வழங்கப்பட்டது. இப்போது மேலும் 11 பிரிவுகளுக்கு வழங்கப்படுகிறது.
ஆஸ்கார் விருதுக்கு அதிகமுறை (59 முறை) பரிந்துரை செய்யப்பட்டவர் மிக்கி மவுஸ் கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கிய வால்ட் டிஸ்னி.
ஆஸ்கார் விருது வரலாற்றில் அதிக ஆஸ்கார் விருதுகளை (22 விருது) பெற்ற ஒரே ஒருவர், வால்ட் டிஸ்னி.
ஆஸ்கார் விருது பெற்ற முதல் கறுப்பின நடிகை ஹாலி பெர்ரி ஆவார். 2001-ம் ஆண்டு 'மான்ஸ்டர்ஸ் பால்' என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருதைப் பெற்றார்.
ஆஸ்கார் விருது பெற்ற கறுப்பின நடிகர், சிட்னி போய்டியர். இவர்
1963-ம் ஆண்டு லில்லிஸ் ஆப் தி பீல்டு' என்ற ஹாலிவுட் திரைப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருதைப் பெற்றார்.
ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் சிவாஜிகணேசன் நடித்து 1969-ம் ஆண்டு வெளியான 'தெய்வமகன்'.
ஆஸ்கர் வரலாற்றில் இரண்டு விருதுகள் வாங்கிய ஒரே இந்தியர் ஏ.ஆர்.ரஹ்மான்
மட்டுமே. ஏ ஆர் ரஹ்மான் விருது வென்ற போது தமிழில் சில வார்த்தைகள்
உதிர்த்தார். ஆஸ்கர் மேடையில் தமிழ் மொழி முதல்முறையாக ஒலித்தது
அப்போதுதான். ஸ்லம் டாக் மில்லியனர் என்ற திரைப்படத்திற்காக 2009 ஆம் ஆண்டு
இரண்டு பிரிவுகளில் ரஹ்மான் விருது வென்றார்.
0 கருத்துகள்