பிள்ளைத்தமிழ் இலக்கியம்

  • பெரியவர்களைக் குழந்தையாகப் பாவித்துப் பாடும் இலக்கியம்.
  • பிள்ளைக் கவி, பிள்ளைப் பாட்டு என்ற பெயர்களும் உண்டு
  • “குழவி மருங்கினும் கிழவதாகும்’’ என்ற தொல்காப்பிய இலக்கணத்தால் சுட்டப்படும் இலக்கியம் பிள்ளைத் தமிழ்.
  • மிகுதியான நூல்கள் தோன்றிய சிற்றிலக்கிய வகை பிள்ளைத் தமிழ்
-    குழந்தையின் மூன்றாம் மாதம் முதல் பாடப்படும்.
-    ஒற்றைப் படை மாதத்தில் (3, 5, 7, 9......) 21 மாதம் வரைப் பாடப்படும்.
-    ஆண்பாற் பிள்ளைத் தமிழ். பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இருவகை உண்டு
-    ஆணுக்குப் பதினாறு வயது வரை பாடலாம்.
-    பெண்ணுக்கு பூப்புத் தொடங்கும் வரை பாடலாம்.
-    அரச குமாரர்களுக்கு முடி சூட்டிய பிறகு பாடக்கூடாது.
-    பிள்ளைத் தமிழ் பாட முடியாமல் விலக்கப்பட்ட ஒரே கடவுள் சிவன்.
-    10 பருவங்களைக் கொண்டது பிள்ளைத் தமிழ்
-    பருவத்துக்குப் பத்துப் பாடல்களாக 100 பாடல்களைக் கொண்டது.

-  காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி - இவ் ஏழு பருவமும் இருபாற்கும் பொதுவாக அமையும்.
-    சிற்றில் சிதைத்தல், சிறுதேர், சிறுபறை என்ற மூன்றும் ஆண்பாற் பிள்ளைத் தமிழில் இறுதிப் பருவங்களாக அமையும்.
-    கழங்கு, அம்மானை (அ) நீராடல், ஊசல் என்ற மூன்றும் பெண்பாற் பிள்ளைத் தமிழில் இறுதிப் பருவங்களாக  அமையும்.

-    செங்கீரை என்றால் தண்டுக்கீரை
-    தால் என்றால் தாலாட்டு
-    சப்பாணி என்றால் கைகொட்டுவது
-    அம்புலி என்றால் நிலவு
-    அம்புலிப் பருவம் பாடுவது கடினம்
-    ‘புலவர்க்கு அம்புலி புலியாம்’ என்பர்

  • சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கும் அமையப் பாடுவது அம்புலிப் பருவம்
  • ஆசிரிய சந்த விருத்தத்தில் (16 சீர்) பாடப்படுவது பிள்ளைத் தமிழ்.
  • பிள்ளைத் தமிழின் முன்னோடி பெரியாழ்வார்
  • கண்ணனைக் குழந்தையாகப் பாவித்துப் பாடியவர்கள் பெரியாழ்வார், பிற்காலத்தில் பாரதியார்
  • இராமனைக் குழந்தையாகப் பாவித்துப் பாடியவர் குலசேகர ஆழ்வார்
  • முதல் பிள்ளைத் தமிழ் குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்
  • பிள்ளைத் தமிழ் ஆயினும் பெரிய தமிழ் என்று சிறப்பிக்கப்படுவது திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்

பிள்ளைத்தமிழ் நூல்கள்
ஒட்டக்கூத்தர்        - குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்
குமரகுருபரர்        - மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ்
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
பகழிக் கூத்தர்    - திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்
அழகிய சொக்கநாதர் - காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ் சிவஞான முனிவர் -  அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை - சேக்கிழார் பிள்ளைத் தமிழ் 

மேற்கோள்
“பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய
கவிவலவ’’ - சேக்கிழார் பிள்ளைத் தமிழ்

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்-2

தமிழ் அறிஞர்களும் சிறப்புப்பெயர்களும் 

Tamil ilakkiya varalaru notes in tamil pdf

கருத்துரையிடுக

0 கருத்துகள்