பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

New 8th Text book Study Notes
“பொது ஏற்புத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பண்டங்கள் வாங்கும்போது அதற்கான செலுத்துத் தொகையாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய எதனையும் பணம் என்று கூறலாம்” – இராபர்ட்சன்.

பணம் என்ற வார்த்தை ரோம் வார்த்தையான “மொனேட்டா ஜுனோ ” விலிருந்து பெறப்பட்டது. இது ரோமின் பெண் கடவுள் மற்றும் ரோம் பேரரசின் குடியரசு பணமாகும்.

இந்தியாவின் “ரூபாய்” என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ‘ரூபியா’ என்றால் வெள்ளி நாணயம் என்று பொருள்.

பண்டமாற்று முறை
பண்டைய காலத்தில் பணம் பயன்படுத்தபடாமல் பண்டத்திற்கு பண்டம் பரிமாற்றம் நடைபெற்றதை பண்டமாற்று முறை என்றனர்.
பண்டமாற்று முறை ஒரு பழைய பரிமாற்ற முறையாகும். பணம்
கண்டுபிடிப்பதற்கு முன்பாக இந்த முறை பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டது.

இந்தியாவில் கி.மு.6ஆம் நூற்றாண்டில் முதன் முறையாக மஹா ஜனபதங்கள் ஆட்சியில் பூரணாஸ், கர்ஷபணம், பனாஸ் போன்ற நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன.

தங்கம், வெள்ளி மற்றும் தாமிரத்தால் ஆன நாணயங்களை டாங்கா என்றும், மதிப்பு குறைந்த நாணயங்களை ஜிட்டால் என்றும் அழைத்தனர்.

1526 யில் இருந்த முகலாய சாம்ராஜ்யம் முழு சாம்ராஜ்யத்திற்கான பணவியல் முறையை ஒருங்கிணைத்தும், இந்த சகாப்த பரிணாம பண வளர்ச்சியில் செர்ஷா சூரி, ஹுமாயூனை தோற்கடித்து ஆட்சியில் இருந்தபோது 178 கிராம் எடையுள்ள வெள்ளி நாணயத்தை வெளியிட்டார். அது “ரூபியா” என அழைக்கப்பட்டது மற்றும் 40 தாமிர துண்டுகள் அல்லது பைசா போன்றவற்றை பயன்படுத்தினர். முகலாய காலம் முழுவதும் வெள்ளி நாணயம் பயன்பாட்டில் இருந்தது.

1717இல் முகலாய பேரரசர் பாருக்ஷாயர், ஆங்கிலேயர்களுக்கு முகலாய பண நாணயத்தை பம்பாய் அச்சகத்தில் அச்சடிக்க அனுமதி அளித்தனர். ஆங்கில தங்க நாணயங்கள் கரோலினா
என்றும், வெள்ளி நாணயங்களை ஏஞ்ஜேலினா என்றும், செம்பு நாணயங்களை கப்ரூன் என்றும் வெண்கல நாணயத்தை டின்னி எனவும் அழைத்தனர்.

இந்தியாவில் 1935ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி (RBI) காகிதப் பணத்தை அச்சிடுதல், ஒழுங்குபடுத்துதல், கட்டுப்படுத்துதல் ஆகிய பணிகளைச் செய்கிறது.

கடன் பணம் அல்லது வங்கிப் பணம்
காகிதப் பணமும், கடன் பணமும் கிட்டதட்ட ஒரே நேரத்தில் வளர்ந்தது. மக்கள் தங்கள் பணத்தின் ஒரு பகுதியை வங்கியில் வைப்பு தொகையாக வைத்து அந்த தொகையை வசதியாக காேசாலை மூலம் திரும்ப பெறலாம்.


காேசாலை கடன் பணம் அல்லது வங்கிப் பணம் என்றும் அழைக்கப்படுகிறது. காேசாலை என்பது பணத்தைக் குறிப்பதல்ல. ஆனால் பணத்தின் பணிகளை மேற்கொள்ளும்.

நிகர் பணம்
உண்டியல், கருவூலக பட்டியல், பத்திரம், கடன் பத்திரங்கள், சேமிப்பு பத்திரங்கள் ஆகியவற்றின் பயன்பாடுகள் பண பரிணாம வளர்ச்சியின் இறுதி நிலையாகும்.

பணத்தின் சமீபத்திய வடிவங்கள்
நெகிழிப் பணம்
கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள் சமீபத்திய நெகிழிப் பணமாகும். பணமில்லா பரிவர்த்தனை இதன் நோக்கமாகும்.

மின்னனு பணம்
நிகழ்நிலை வங்கி (இணைய வங்கி)
மின் வங்கி
மின்னணு வங்கியை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) என்றும் அழைக்கலாம்.

பணத்தின் மதிப்பு
பணத்தின் மதிப்பு என்பது பணத்தால் ஒரு நாட்டிலுள்ள பண்ட மற்றும் பணிகளை வாங்கும் சக்தியை குறிக்கும். ஆகையால், இது பண்ட மற்றும் பணிகளின் விலை அளவை சார்ந்திருக்கும். ஆனால் பணத்தின் மதிப்பும் விலையின் அளவும் எதிர்மறை தொடர்புடையது.
 

பணத்தின் மதிப்பு இருவகைகள்
1. பணத்தின் அக மதிப்பு
2. பணத்தின் புற மதிப்பு
பணத்தின் அக மதிப்பு என்பது உள்நாட்டிலுள்ள பண்ட மற்றும் பணிகளின் வாங்கும் சக்தியை குறிக்கும்.
பணத்தின் புற மதிப்பு என்பது வெளி நாட்டிலுள்ள பண்ட மற்றும் பணிகளை வாங்கும் சக்தியை குறிக்கும்.
பணத்தின் (ரூபாய்) குறியீடு
இந்திய ரூபாய் குறியீடு தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம்
மாவட்டத்தை சேர்ந்த திரு. உதயகுமார் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இது ஜூலை 15, 2010
அன்று இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது.

பணவீக்கம்
பணவீக்கம் என்பது விலைகள் உயர்ந்து, பணத்தின் மதிப்பு
வீழ்ச்சியடைவதையும் குறிக்கும்.

பணவாட்டம்
பணவாட்டம் என்பது விலைகள் குறைந்து பணத்தின் மதிப்பு உயர்வதைக் குறிக்கும்.

பணம் மதிப்பிழப்பு
2016 நவம்பர் 8ஆம் தேதி இந்தியாவில் இந்திய அரசாங்கம் கருப்பு பணத்திற்கு எதிராக அனைத்து 500 மற்றும் 1000 நோட்டுக்களை பண மதிப்பிழப்பு செய்வதாக அறிவித்தது.

கருப்புப் பணம்
கருப்புப் பணம் என்பது கணக்கில் கொண்டு வராத பணத்தின் ஒரு
வடிவமாகும். இது பெரும்பாலும் வணிக மக்களால் தோற்றுவிக்கப்படுகிறது.


கருப்பு பணத்திற்கு எதிராக சில சட்டரீதியான கூட்டமைப்பு

1. பண மோசடி நடவடிக்கை தடுப்புச் சட்டம் 2002.
2. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்.
3. ஊழல் தடுப்புச் சட்டம் 1988.
4. வெளிக் கொணரப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்து மசோதா (வரி விதித்தல்) – 2015.
5. பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் 1988, 2016இல் திருத்தப்பட்டது.
6. ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம் 2016


கருத்துரையிடுக

0 கருத்துகள்