தமிழ்நாடு தோட்டக்கலை சேவை துறையில் காலியாக உள்ள உதவி இயக்குநர், தோட்டக்கலை அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 197
பணி : Assistant Director of Horticulture
காலியிடங்கள்: 28 சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
பணி : Horticultural Officer
காலியிடங்கள்: 169
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500
தகுதி: தோட்டக்கலை பிரிவில் பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, பிசிஎம் மற்றும் விதவைகள் பிரிவினருக்கு உச்சபட்ச வயதுவரம்பில்லை.
பதிவுக் கட்டணம்: ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.200 என ரூ.350 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். ஒருமுறை பதிவுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சார்ப்பு - அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்கள்: சென்னை , மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர்
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 04/03/2021
முழுவிளக்கம் பாடதிட்டம் அறிய இங்கே சொடுக்கவும்
0 கருத்துகள்