கிரிஷி அம்தானி பீமா யோஜனா | பிரதான் மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா

கிரிஷி அம்தானி பீமா யோஜனா (Krishi Amdani Bima Yojana)

துவக்கம் : ஜூன் 2, 2014 

நோக்கம் : வேளாண் காப்பீடு 

குறிக்கோள் : எதிர்பாரா வானிலை நிகழ்வுகள் அல்லது வேறு பிற காரணங்களினால் தங்களது வேளாண் உற்பத்திப் பொருட்கள் பாதிக்கப்படும் பொழுது இத்திட்டமானது உழவர்களுக்கு உதவும். 

பயனாளிகள் : சிறு மற்றும் குறு விவசாயிகள்

பிரதான் மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா (Pradhan Mantri Krishi Sinchayee Yojana)

துவக்கம் : 2015-2016 

திட்டகாலம் : 2015-2016 முதல் 2019-2022 வரை 

நோக்கம் : நுண் நீர் பாசனம் 

குறிக்கோள் : உறுதி செய்யப்பட்ட நீர்பாசனத்தின் கீழ் வேளாண் பயிர் செய்யக்கூடிய பகுதிகளை விரிவுப்படுத்துதல், வேளாண்மையில் நீர் பயன்பாட்டு திறனை அதிகரித்தல் மற்றும் வேளாண்மையில் நீடித்த பாதுகாப்பு நடைமுறைகளை அறிமுகப்படுத்துதல். பண்ணைகளில் நீருக்கான அணுக்களை மேம்படுத்துதல்.

நிதியளிப்பு : மத்திய மாநில அரசுகளினால் பகிர்ந்தளிக்கப்படும் நிதியானது நபார்டு வங்கி மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. 

திட்டக்கூறுகள் : இத்திட்டமானது மூன்று வெவ்வேறு அமைச்சகங்களின் பின்வரும் மூன்று முந்தைய திட்டங்களை உள்ளடக்கியதாகும்.

  • மத்திய நீர் வள அமைச்சகத்தின் துரிதப்படுத்தப்பட்ட நீர் பாசன பயன்திட்டம்.
  • மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த நீர்பிடிப்பு
    மேலாண்மைத் திட்டம். 
  • நீடித்த வேளாண்மைக்கான பண்ணை நீர் மேலாண்மைத் தேசியத் திட்டம்.

செயல்படுத்தும் நிறுவனம் : மத்திய வேளாண்மை அமைச்சகம், மத்திய நீர் வள அமைச்சகம், மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம். 

திட்டக்கூறுகள் : “ஒவ்வொரு நீர் துளிக்கும், அதிகப்படியான விளைச்சல்”


கருத்துரையிடுக

0 கருத்துகள்