FMD முக்தா பாரத்

FMD முக்தா பாரத் 

துவக்கம் : 09 ஆகஸ்ட், 2016 

நோக்கம் : கோமாரி நோயினை ஒழித்தல் 

திட்ட விளக்கம் : கோமாரி நோயானது ஓர் தொற்றுநோயாகும். ஒரு சில வேளைகளில் இது உயிர் கொல்லி நோயாகும். இந்நோயானது உள்நாட்டு மற்றும் காட்டு எருமைகள் உள்பட வெட்டுக் குளம்புடைய விலங்குகளை பாதிக்கின்றது.

அலங்கார மீன்கள் வளர்ப்புத் திட்டம்

துவக்கம் : 09 மார்ச் 2017 

நோக்கம் : நாட்டின் அலங்கார மீன் வளர்ப்புத் துறையின் ஆற்றலை வெளிக்கொணர்தல். 

குறிக்கோள் :

  • திரள் தொகுப்பு அடிப்படையிலான அணுகு முறையோடு நாட்டில் அலங்கார மீன்கள் வளர்ப்பு கலாச்சாரத்தை மேம்படுத்துதல்.
  • அலங்கார மீன்களின் வர்த்தகம் மற்றும் ஏற்றமதி வருவாயை அதிகரித்தல்.
  • ஊரகம் மற்றும் நகர்ப்புற மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
  •  வளரும் இலாபகரமான செயல்பாடாக அலங்கார மீன்கள் வளர்ப்பினை உருவாக்க நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் புத்தாக்கங்களை
    பயன்படுத்துதல்.

நிதியளிப்பு : நீலப் புரட்சித் திட்டத்தின் மேல்வரியின் கீழ் இத்திட்டத்தில் நிதியளிப்பு முறை உள்ளது. 

அமல்படுத்தும் அமைப்பு : தேசிய மீன் வளர்ப்பு மேம்பாட்டு வாரியமானது மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களின் மீன் வளர்ப்புத் துறையின் மூலம் இத்திட்டத்தை அமல்படுத்துகின்றது. 

இத்திட்டத்தின் கீழான நடவடிக்கைகள் :

அலங்கார மீன்களை பெருக்குதல்.
(அல்லது)
அலங்கார மீன்களை வளர்த்தல்.
(அல்லது)
கிடைக்கும் இடத்தைப் பொறுத்து அலங்கார மீன்களைப் பெருக்குதல்
மற்றும் வளர்த்தல்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்