மாநில மேல்முறையீட்டு நீதி மன்றங்களைக் கலைத்துவிட்டு அலகாபாத்தில் சிவில், கிரிமினல் மேல் முறையீட்டு நீதி மன்றங்களை நிறுவினார்.
மாவட்ட ஆட்சியர், மாஜிஸ்ட்ரேட் பதவிகளை முன்பு போல ஒருங்கிணைத்தார்.
தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் சட்ட நிபுணர் ஒருவரை நியமனம் செய்தார். இக்குழுவின் முதல் சட்ட உறுப்பினர் மெக்காலே பிரபு ஆவார்.
இராஜாராம் மோகன்ராயுடன் கி.பி. 1829 இல் சதி, உடன்கட்டை ஏறுதல் ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
பெண் சிசு கொலையைப் பெருங்குற்றமாக அறிவித்தார்.
ஒரிசா மலைவாழ் மக்களிடம் இருந்த நரபலியிடுதலை தடை செய்தார்.
நரபலியிடுதல் குற்றமாகக் கருதப்பட்டது.
வில்லியம் பெண்டிங் பிரபு காலத்தில் ஆங்கில மொழி பயிற்று மொழியாக மாறியது.
நீதிமன்றங்களில் பயன்பட்டு வந்த பாரசீக மொழிக்குப் பதிலாக வட்டார
மொழிகளைப் புகுத்தினார்.
1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டத்தின் மூலம் சென்னை, பம்பாய், கல்கத்தாவில் கிறித்துவர்களின் நலனுக்காக பிஷப்புகள் நியமிக்கப்பட்டனர். இச்சட்டத்தின்படி வங்காள கவர்னர் ஜெனரல் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் (தலைமை ஆளுநர்) பொறுப்பேற்றார்.
இச்சட்டத்தின்படி கவர்னர் ஜெனரல் நிர்வாகக் குழுவில் சட்ட உறுப்பினர் ஒருவர் இடம் பெற்றார்.
முதல் சட்ட உறுப்பினர் மெக்காலே பிரபு. நிர்வாகம், சமூகம் இரண்டிலும் பல நல்ல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததால் இந்திய கவர்னர் ஜெனரல்களில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார்.
இந்தியர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டதால் இவர் ரிப்பன் பிரபுடன் ஒப்பிடப்படுகிறார்.
0 கருத்துகள்